top of page

’பாட்டல் ராதா’ - விமர்சனம்

mediatalks001

சென்னையில் கட்டுமான வேலையில் டைல்ஸ் பதிவிடுதலில் பெயரடுத்த மேஸ்திரியான நாயகன் குரு சோமசுந்தரம் மனைவி சஞ்சனா நடராஜன் ,ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் குடிகார தோழன் பாரி இளவழகனுடன் எந்நேரமும் மதுகுடிப்பதே வேலையாக வைத்திருக்கிறார்


ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் அவரின் மனைவி சஞ்சனா நடராஜன் குரு சோமசுந்தரத்தை ஜான் விஜய் நடத்தும் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கிறார்.


அங்கே அவர் எதிர்பாராத துன்பங்கள் எல்லை மீறிப் போக, அங்கிருந்து தப்பித்து விடுகிறார்.


போதை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பித்து வெளியே வந்த குரு சோமசுந்தரம் மீண்டும் குடிக்கத்தொடங்க,,, வெறுத்து போகும் அஞ்சனா நடராஜன் குழந்தைகளுடன் தனி வாழ்க்கை நடத்துகிறார் .


அதிர்ச்சியடையடையும் குரு சோமசுந்தரம் சில நாட்களுக்கு பின் ஜான் விஜய் நடத்தும் போதை மறுவாழ்வு மையத்துக்கு செல்கிறார் .


 முடிவில் குடிகார நோயாளியாக இருந்த நாயகன் குரு சோமசுந்தரம் மதுபோதை பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா ?


பிரிந்த அவரது குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’பாட்டல் ராதா’

பாட்டல் ராதா என்ற ராதா மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் உண்மையான குடிகார நோயாளியாக சிறப்பான நடிப்பில் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.


இயல்பான நடிப்பில் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன்


இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் மது போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஜான் விஜய், லொள்ளு சபா மாறன்,ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும் ,பின்னணி இசையும் ,ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.


இன்றைய சமூகத்தில் குடி பழக்கத்தால் போதைக்கு அடிமையாகி குடி நோயாளியாக இருக்கும் ஒருவனது குடும்பம் எந்த நிலைமைக்கு செல்கிறது என்பதை கதையாக வைத்து , பாராட்டும்படியான அழுத்தமான திரைக்கதையுடன் ஒரு சமுக பொறுப்புடன் குடிக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம்

 


ரேட்டிங் - 3 .5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page