top of page

''குடும்பஸ்தன்'' - விமர்சனம்

mediatalks001

ஆர் சுந்தரராஜனின் மகனான நாயகன் மணிகண்டன் நாயகி சான்வி மேகனாவை காதலிக்க இருவரும் காதலர்களாக இருக்கின்றனர் .


இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ,


இந்நிலையில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.


பாலாஜி சக்திவேல் தலைமையில் இயங்கும் ஒரு கம்பெனியில் வெப் டிசைனராக வேலை செய்கிறார் மணிகண்டன்.


திருமணமாகி குடும்பஸ்தனாகிவிடும் மணிகண்டனுக்கு குடும்ப பொருளாதார சுழலில் பணத்தின் தேவை அதிகமாகிறது .


இந்நேரத்தில் தன்னுடன் வேலை செய்யும் நண்பனால் பிரச்சனை ஏற்பட்டு பாலாஜி சக்திவேலினால் வேலை பறி போகிறது .


குடும்பத்தினர்களுக்கு தெரிந்தால் தேவையில்லாத சிக்கலாகிவிடும் என்பதால், வீட்டில் சொல்லாமலேயே குடும்ப செலவுகளை சமாளிக்க ஆயிரக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்குகிறார் மணிகண்டன்.


ஒரு கட்டத்தில் தன் அக்காளின் கணவனான குரு சோம சுந்தரம் இவரது வேலை பறி போன விஷயத்தை குடும்பத்தினர் அனைவரது முன்னிலையில் அம்பலபடுத்துகிறார்.


மேலும் ஏதாவது ஒரு வகையில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க சொந்தமாக மணிகண்டன் பேக்கரி கடையை திறக்க அதுவும் எதிர்பார்த்தது போல் அமையாமல் நஷ்டம் அடைகிறது.


இக்கட்டான சூழ்நிலையில் பாலாஜி சக்திவேல் மீண்டும் வேலை கொடுக்க ,,குடும்பத்தாரின் நடவடிக்கையால் மேலும் பணம் சம்பாதிக்க வெளிநாட்டிற்கு செல்வதற்கான முயற்சியை மேற்கொள்கிறார் மணி கண்டன்.

வெளிநாட்டிற்கு செல்வதை குடும்பத்தினர் அனைவரும் தடுக்கும் நிலையில் இறுதியில் மணி கண்டன் வெளிநாட்டிற்கு சென்று தன் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ''குடும்பஸ்தன்''


கதையின் நாயகனாக நடித்துள்ள மணிகண்டன் துடி துடிப்புள்ள இளைஞனாக கதையுடன் இணைந்து ஒவ்வொரு காட்சிகளிலும் உடல் மொழியில் தனது கதாபாத்திரத்தை ரசிகர்கள் விரும்பும் வகையில் இயல்பாக மிக சிறப்பான நடிப்பை வெளிப் படுத்துகிறார்.

கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேகனா,தன் சகோதரியின் கணவனாக குரு சோமசுந்தரம் ,அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.சுந்தரராஜன், அம்மாவாக நடித்திருக்கும் குடசனத் கனகம், அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்கள பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .

இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனது கதையை கொண்டு அன்றாடம் தன் குடும்பத்திற்காக தேவைப்படும் பணத்திற்காக ஒவ்வொரு ஆணும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இயல்பு தன்மை மாறாமல் பிரசன்னா பாலச்சந்திரனுடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதியிருக்கும் ராஜேஷ்வர் காளிசாமி அனைவரும் ரசிக்கும்படி குடும்ப படமாக படத்தை இயக்கியுள்ளார்.


ரேட்டிங் - 3 . 5 / 5

Комментарии


©2020 by MediaTalks. 

bottom of page