top of page

‘வல்லான்’ - விமர்சனம்

mediatalks001

மத போதகரான ஜெயக்குமாரின் மகளான அபிராமி வெங்கடாசலத்தின் கணவர் கமல் காமராஜ் கொடுரமான முறையில் முகம் சிதைக்கப்பட்டு மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.


இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அருள் டி சங்கரால் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான சுந்தர் சியிடம்,,,இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் விசாரணையை மேற்கொள்ளும்படி பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் உயரதிகாரி.


இந்நேரத்தில் தனியார் சேனலில் இந்த கொலை வழக்கை பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லும் பெண் நிருபர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார்.


அதே நேரத்தில் ஒரு புதருக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது. பிணமாய் இருந்த அந்த பெண்ணின் சடலம்,,,,, திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் காணமல் போன தன் காதலி தன்யா ஹோப் தான் என்ற உண்மை சுந்தர் சி க்கு தெரிகிறது .


முடிவில் சுந்தர் சி நடந்த கொலைகளை செய்த கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா ? கொலைகளுக்கான பின்னணியில் இருந்த மர்ம நபர் யார் ? உண்மையில் கொல்லப்பட்டது நாயகி தன்யா ஹோப் தானா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம் ‘வல்லான்’


இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுந்தர்.சி வழக்கமான நடிப்பில் அதிரடி சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் ரசிகர்கள் கவனம் பெறுகிறார் .


மத போதகராக வரும் ஜெயக்குமார் , ஹேபா படேல், அபிராமி வெங்கடாசலம் ,தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், டி.எஸ்.கே என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் .


இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் , மணி பெருமாள் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக இருக்கிறது.


கொடுரமாக நடக்கும் கொலை அதன் பின்னணியில் நடைபெறும் மர்மங்களை கதையாக கொண்டு விறு விறுப்பான சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதை அமைப்பில் க்ரைம் திரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் வி எஸ் மணி சேயோன் .


ரேட்டிங் - 3 / 5

Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page