’2K லவ் ஸ்டோரி’ - விமர்சனம்
- mediatalks001
- Feb 16
- 1 min read

பள்ளி பருவ காலம் முதல் கல்லூரி வரை நட்புடன் இருக்கும் நண்பர்களான ஜெகவீர் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து ப்ரீ வெட்டிங் ஷுட் என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
ஜெகவீரும் மீனாட்சி கோவிந்தராஜனும் உரிமையுடன் நட்பாக பழகுகின்றனர் .
இதனிடையே இவர்கள் கல்லூரியில் படிக்கும் ஜுனியர் மாணவியான லத்திகா பாலமுருகனை ஜெகவீர் ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாற்ற அதன் பின் லத்திகா பாலமுருகன் ஜெகவீரை சந்தித்து தன்னுடைய காதலை சொல்கிறார்.
ஜெகவீர் மீனாட்சி கோவிந்தராஜனின் ஒப்புதலுடன் லத்திக்கா பாலமுருகனை காதலிக்க தொடங்குகிறார்.
இவர்களின் காதலுக்கு நடுவே மீனாட்சி கோவிந்தராஜன் தடையாக இருப்பதாக லத்திக்கா பாலமுருகன் நினைக்க, ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சந்தேகத்தை மீனாட்சி கோவிந்தராஜன் தீர்த்து வைக்கிறார்.
காதல் ஜோடிகளான ஜெகவீரும் லத்திக்கா பாலமுருகனும் ஒரு நாள் சுற்றுலா செல்லும் போது வழியில் விபத்து ஏற்பட்டு லத்திக்கா பாலமுருகன் இறந்து விட, மனஉளைச்சலில் இருக்கும் ஜெகவீருக்கு நட்புடன் பழகும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆறுதலாக இருக்கிறார் .
இவர்களின் பெற்றோர் ஜெயபிரகாஷின் மகனை மீனாட்சி கோவிந்தராஜுக்கும் , மகளை ஜெகவிருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர்.
ஜெயபிரகாஷின் உறவு முறையான சிங்கம் புலி திருமணத்தை நிறுத்துவதற்காக தன் சகாக்களுடன் பல சுழ்ச்சிகளை செய்கிறார். .
முடிவில் ஜெகவீர் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜனின் திருமணம் சிங்கம் புலியின் சூழ்ச்சியால் நடைபெறாமல் போனதா ?
அனைத்து தடைகளையும் மீறி இருவரது திருமணமும் கோலாகலமாக நடந்ததா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’2K லவ் ஸ்டோரி’
கதையின் நாயகனாக அறிமுக நடிகர் ஜெகவீர் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .
நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜனும் ,மற்றொரு நாயகியான லத்திகா பாலமுருகனும் கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கின்றனர் .
பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், சிங்கம் புலி, வினோதினி, ஜெயப்பிரகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை நடிப்பில் இயல்பாக செய்துள்ளனர் .
டி.இமான் இசையும் ,ஒளிப்பதிவாளர் வி.எஸ்.அனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
ஆண், பெண் இடையிலான நட்பை மையப்படுத்திய கதையுடன் திரைக்கதையில் நட்பின் பிணைப்பை ஆழமாக சித்தரித்து இன்றைய 2k இளைஞர்கள் ரசிக்கும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
ரேட்டிங் - 2.5 / 5
Comments