top of page

’பராரி’ - விமர்சனம் !

mediatalks001

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராஜாபாளையம் ஊராட்சி கிராமத்தில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நாயகன் ஹரி சங்கர்,, உயர் வர்க்க சமூகத்தை சேர்ந்த நாயகி சங்கீதாவும் வெவ்வேறு இடங்களில்  வாழ்ந்து வருகிறார்கள்.

 

 இந்நிலையில் கிராமத்தில் நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  பொதுவாக உள்ள கோரங்கல்  பாறையை மையமாக வைத்து நடக்கும் சண்டையில் , தண்ணீர் தொட்டி பிரச்சனை தொடர்பாக இருபிரிவினருக்கும் அடிக்கடி தகராறு  நடந்து கொண்டே இருக்கிறது.

அதே கிராமத்தில்  கரும்பு வெட்டும் வேலை பார்த்து வரும்  நாயகி சங்கீதா சிறு வயதில் இருந்தே நாயகனை ஒரு தலையாக காதலித்து வருகிறார்

 

இந்நேரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் பழ சாறு நிறுவனத்திற்கு  இரு பிரிவினர் சேர்ந்த  மக்கள்  3 மாத வேலைக்காக செல்கின்றனர். 


அதே  சமயம் இவர்களுடன் வேலைக்கு செல்லும் உயர் வர்க்க சமூகத்தை சேர்ந்த பிரேம்நாத்  கிராம பிரச்சனை தொடர்பாகவும் ,தன் வருங்கால மனைவியை காதலிப்பதாலும் நாயகன் ஹரி சங்கரை பழ சாறு பேக்டரியில் வைத்து கொலை செய்ய நினைக்கிறார்.

 

இதே பேக்டரியில் கன்னட வெறியனான புகழ் மகேந்திரன் வேலை செய்யும் நேரத்தில்   சங்கீதாவிடம்  தவறாக நடக்க முயற்சிக்க  ஹரி சங்கர். புகழ் மகேந்திரனை அடித்து புரட்டி எடுக்கிறார். 

 

இப் பிரச்சனையில் கன்னட வெறியனான புகழ் மகேந்திரனுக்கும்   ஹரி சங்கருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. 

 

இறுதியில் வில்லன் புகழ் மகேந்திரன் ஹரி சங்கரையும் நாயகி சங்கீதாவையும் தன் சகாக்களுடன் கொலை செய்ய  முயற்சி செய்கிறார். முடிவில் நாயகன் ஹரி சங்கர்  கன்னட வெறியர்களிடம் இருந்து  நாயகி சங்கீதாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’பராரி’

 

கதையின் நாயகன் ஹரி சங்கர் இயல்பான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .. 

கதைக்கேற்றபடி தேவகியாக  நடித்த சங்கீதா கல்யாணின் நடிப்பு சிறப்பு . 

குறிப்பாக கன்னட வெறியனாக நடித்திருக்கும் புகழ் மகேந்திரன் மிரட்டலான நடிப்பில் ரசிகர்கள் கவனம் பெறுகிறார் .

படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் அனுபவப்பட்ட 

நடிகர்களாக நடித்திருப்பது திரைக்கதைக்கு பக்க பலம் 

 

ஷான் ரோல்டனின் இசையும்  , ஸ்ரீதர் ஒளிப்பதிவும்  படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

 

காலம் காலமாக கிராமங்களில்  இன்றும் நடக்கும் ஜாதி ஏற்ற தாழ்வுகளின்  அடிப்படையான கதையை மையமாக வைத்து காட்சிகளிலும் வசனங்களிலும் அனைவரும் பாராட்டும் விதத்தில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எழில் பெரியவேடி. 


ரேட்டிங் - 3.5 / 5

 

 

 

Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page