top of page

‘ஒத்த ஓட்டு முத்தையா’ - விமர்சனம்


நாயகன் கவுண்டமணி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால் ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படும் அரசியல்வாதி.


தேர்தலில் தோல்வியடைந்து தனக்கு பதவி கிடைக்காமல் போனாலும் பணபலம் படைத்ததுடன் அரசியல் செல்வாக்கு மிக்கவர்.


கவுண்டமணி தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருக்கிறார். 


அவரின் தங்கைகள் காதலிப்பவர்களை, அண்ணன் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில், வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த தங்களது காதலர்களை சகோதர்களாக நடிக்க வைக்கிறார்கள் கவுண்டமணியின் தங்கைகள்.


இந்நேரத்தில் மீண்டும் தேர்தல் வருகிறது. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் கவுண்டமணிக்கு சீட் கொடுக்காமல்  மேலிடம் அவரிடம் கார் ஓட்டுநராக வேலை செய்யும் யோகி பாபுக்கு  சீட் கொடுத்து விடுகிறது. 


யோகி பாபுக்கு  சீட் கொடுத்ததால் ஆத்திரமடையும் கவுண்டமணி கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிடுகிறார் .


முடிவில் சுயேட்சையாக போட்டியிடும் கவுண்டமணி தேர்தலில் வெற்றி பெற்றாரா?


கவுண்டமணியை ஏமாற்றிய  அவரது தங்கைகள் தங்களது காதலர்களை திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா ? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம்தான் ‘ஒத்த ஓட்டு முத்தையா’   .  


கதையின் நாயகனாக நடித்திருக்கும் கவுண்டமணி காமெடியால்  வழக்கம் போல் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் .


யோகி பாபு தன் பங்குக்கு  சில காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார் .


வாசன் கார்த்திக்,  அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, ஓ.ஏ.கே.சுந்தர், மொட்ட ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லஷ்மண், வையாபுரி, முத்துக்காளை, டி.ஆர்.சீனிவாசன், கூல் சுரேஷ், சதீஸ் மோகன், செண்ட்ராயன், இயக்குனர் சாய் ராஜகோபால்,  டெம்பிள் சிட்டி குமார் என படத்தில் நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் . 


சித்தார்த் விபின் இசையும் , எஸ்.ஏ.காத்தவராயனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் 

 

தமிழக அரசியல் சம்பவங்களை நகைச்சுவையாக  சித்தரித்து காமெடி கலந்த திரைக்கதை அமைப்பில் படத்தை  எழுதி இயக்கியிருக்கிறார்  சாய் ராஜகோபால்


ரேட்டிங்  -  2 .5 /  5



Comments


©2020 by MediaTalks. 

bottom of page