
தமிழ் சினிமாவில் கலை இயக்குனராக பணி புரிந்த நாயகன் ஜீவா, அறிமுகமாகும் தன் புதிய முதல் படத்திற்காக நண்பர்களான ராஷி கண்ணா, ஷாரா, இந்துஜா ஆகியோருடன் இணைந்து பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றில் படத்திற்கான செட்டிங் வேலையை செய்கிறார் .
இந்நிலையில் படத்தின் இயக்குனர் அப் பட நாயகியை திருட்டு தனமாக திருமணம் செய்து கொள்ள,,,,,,, ஜீவாவின் படம் ஆரம்பிப்பதற்குள் நின்று போக என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் ஜீவா நிற்கிறார்,
இதனையடுத்து ராஷி கண்ணா ஜீவா உருவாக்கிய அரங்கத்தை மக்கள் அனைவரும் வந்து செல்லும் வகையில் ஸ்கேரி ஹவுஸ் எனப்படும் பேய் பங்களாவாக மாற்றி வடிவமைக்கலாம் என சொல்கிறார்.
ராஷி கண்ணாவின் யோசனை நன்றாக இருக்க ஜீவா அதனை ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்ற. மக்களின் ஆதரவு பெருக அங்கு சில அமானுஷ்யமான சம்பவங்கள் அந்த பங்களாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஸ்கேரி ஹவுஸ் உள்ளே சென்ற காதல் ஜோடி ஒன்றில் காதலன் மாயமாகி விட, பொதுமக்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று போலீஸார் கூறிவிடுகின்றனர்.
தொழில் நஷ்டம், வீட்டில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கும் தனது அம்மா ரோகிணி என வாழ்க்கையில் ஒரு போராட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜீவா.
இச்சமயத்தில், பங்களாவில் செட்டிற்கு கீழே ஒரு சுரங்கம் இருப்பதை கண்டுபிடிக்கிறார் ஜீவா. அங்கு சென்று பார்த்த பின் திகிலுடன் அதிர்ச்சிகரமான பல சம்பவங்கள் அவருக்கு நடக்கிறது.
அமோக வரவேற்பை மக்களிடம் பெற்ற அந்த பங்களாவில் நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதோடு, அங்கிருந்து ஜீவாவை அந்த அமானுஷ்யங்கள் விரட்டியடிக்கிறது.
அதே நேரத்தில் அந்த பங்களாவில் ஏதோ ஒரு மர்ம பின்னணி இருப்பதையும், தனக்கும் அந்த பங்களாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதையும் அறிந்துக் கொள்ளும் ஜீவா, அதன் முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
முடிவில் ஜீவாவின் முயற்சியில் அனைத்து உண்மைகளும் தெரிந்ததா ? உயிருக்கு போராடும் தனது தாயை ஜீவா காப்பாற்றினாரா.?இல்லையா ? என்பதை சித்த மருத்துவம் மற்றும் சித்தர்களின் முக்கியத்துவதோடு சொல்லும் ‘அகத்தியா’.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஜீவா சினிமா பட கலை இயக்குனர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் என்ற இரண்டு விதமான கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதைகேற்றபடி நாயகியாக இயல்பாக நடிக்கும் ராஷி கண்ணா
சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் ஸ்டைலிஷாக தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்கிறார்.
கதைக்கு பக்க பலமாக எட்வர்ட் சோனென்ப்ளிக், மாடில்டா மற்றும் ராதாரவி, சார்லி ,செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வு .
யுவன் சங்கர் ராஜா இசையும் , தீபக்குமார் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
சித்தர்களின் பெருமையை சொல்வதுடன் சித்த மருத்துவத்தின் மகிமையை கதையாக கொண்டு திரைக்கதையில் பேண்டஸி, ஹிஸ்டாரிக்கல், காமெடி, சென்டிமென்ட் என அனைவரும் ரசிக்க கூடிய திகில் கலந்த படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பா விஜய்
ரேட்டிங் - 3 / 5
Comentarios