top of page

‘சப்தம்’ - விமர்சனம்

mediatalks001

கேரள மாநிலத்தில் உள்ள மூணாரில் இருக்கும் ஹோலி ஏஞ்சல்ஸ் மருத்துவக் கல்லூரியில் பெண் ,ஆண் என மூன்று மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.


அதனால், அந்த கல்லூரியில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக தகவல் பரவுவதை தொடர்ந்து அங்கு உண்மையிலேயே அமானுஷ்யம் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை கல்லூரி நிர்வாகம் மேற்கொள்கிறது .



மும்பையில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதி சப்தங்கள் மூலம் ஆவிகளான பேய்களை கண்டறியும் பாரா நார்மல் என்கிற டெக்னாலஜி முலம் பலரது பிரச்சினைகளை தீர்வு காணும் தொழிலை செய்து வருகிறார் .


ஆதியை பற்றி கேள்விப்படும் கல்லூரி நிர்வாகம் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிபுணரான அவரை மூணாருக்கு வரவழைக்கிறது .


மருத்துவக் கல்லூரியில் நடந்த மர்ம மரணங்களின் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆதிக்கு பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடக்கின்றன.


இதே கல்லூரி மாணவியான லட்சுமி மேனன் அக்கல்லூரி பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார்.


கல்லூரியில் உள்ள நூலகத்திற்கு செல்லும் லட்சுமி மேனனை அமானுஷ்ய சக்தி பிடித்துவிடுகிறது.


இந்நிலையில் ஆதி லட்சுமிமேனன் மேல் உள்ள அமானுஷ்யம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது ,,,,,மருத்துவக் கல்லூரியில் உள்ள பழைய நூலகத்தில் கல்லூரியை வேட்டையாடுவது 42 சிறிய வயது மாற்றுத்திறனாளி ஆவிகள் என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை லட்சுமிமேனன் மூலம் கண்டுபிடிக்கிறார்.


மேலும் 34 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் ராஜீவ் மேனனின் மனைவி சிம்ரன் தொடர்புடைய 42 ஆவிகள் என்பதையும் தெளிவாக அறிகிறார்.


முடிவில் எதற்காக இந்த 42 மாற்றுத்திறனாளி ஆவிகள் கல்லூரியில் மரணத்தை ஏற்படுத்துகின்றன?


சிம்ரனுக்கும் 42 ஆவிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ?


சிம்ரன் 34 ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதற்கு யார் காரணம் ?


42 மாற்றுத்திறனாளி ஆவிகளை கொன்ற கொலையாளி யார்? என்பதை இறுதியில் ஆதி கண்டுபிடித்தாரா? இல்லையா?என்பதை சொல்லும் படம்தான் ‘சப்தம்’


கதையின் நாயகனாக ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளராக நடித்திருக்கும் ஆதி இயல்பான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .


நாயகியாக நடித்திருக்கும் லஷ்மி மேனன் அழகாக வந்து அளவான நடிப்பின் மூலம் கவர்கிறார்.


சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன், எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் திரைக்கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் லைலாவின் வில்லத்தனம் நடிப்பில் எடுபடவில்லை .


இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.


அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு தரம் .


ஆவிகளின் கதையை வைத்து ஆன்மாக்களின் உணர்வுகளை சப்தங்கள் மூலம் வெளிக்காட்டி ரசிகர்கள் மிரளும்படியான காட்சிகளுடன் ஒரு எதிர்பார்ப்புடன் கதையை நகர்த்தி தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்க்காத பேய் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்


ரேட்டிங் : 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page