
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர கிராமமான தூவத்தூர் என்ற மீன்பிடி கிராமத்தில் மீனவ மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அரசாங்கம் பல வருடங்களுக்கு முன் தடை விதிக்கிறது.
காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிகிறது.
மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்கள் அடுத்துடுத்து மர்மமான முறையில் இறந்து கொண்டே இருப்பதால் தூவத்தூர் கிராமம் மீன்பிடிப்பதற்கு உகந்த கிராமம் இல்லை என்பதால்தான் இந்த தடையை அரசாங்கம் விதிக்கிறது.
மீன் பிடி தொழில் இல்லாததால் அங்கு இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பையும் பணத்தையும் கொடுத்து அவ்வப்போது அவர்களின் பசியை போக்கி வருகிறார்தாதாவாக இருக்கும் சாபுமோன் அப்துசமத். நாயகன் ஜிவி பிரகாஷ் சாபுமோன் அப்துசாமதிடம் வேலை பார்த்து வருகிறார்.
சாபுமோன் அப்துசமத் கட்டளைபடி ஜிவி பிரகாஷ்குமார் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை எல்லை கடந்து சென்று வேறு ஒரு நாட்டிற்கு கடத்திச் சென்று உரியவரிடம் ஒப்படைக்கும் வேலையை செய்து வருகிறார் .
ஒரு கட்டத்தில் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு தாதாவான சாபுமோன் அப்துசமதிடம் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க முடிவு செய்கிறார்.
அதற்காக அந்த கடலுக்குள் சென்று பிரச்சனையை தீர்க்க மீன்பிடிக்க செல்லும் ஜிவி பிரகாஷ் தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல உடன் நாயகி திவ்ய பாரதியும் செல்கிறார். கடலுக்குள் செல்லும் இவர்களை யாரும் எதிர்பார்க்காத வகையில் அமானுஷ்யங்கள் சூழ்ந்து கொள்கின்றன.
முடிவில் ஜிவி பிரகாஷ் அமானுஷ்ய சக்திகளை முறியடித்து தனது நண்பர்களுடன் கரைக்கு உயிருடன் திரும்பி வந்தாரா? இல்லையா? அந்த கடலுக்குள் இருக்கும் அமானுஷ்யம் என்ன.? என்பதை சொல்லும் படம்தான் ’கிங்ஸ்டன்’
மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் வழக்கமான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதி, அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஜி வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் கேட்டும் ரகம் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாவும் பிரம்மாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஹாலிவுட் தரத்தில் கடலில் நடக்கும் மர்ம சம்பவங்களை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கமல் பிரகாஷ்,
தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் என ஆச்சர்யப்படும் அளவிற்கு திரைப்படத்தை கொடுத்த பட குழுவினருடன் இயக்குனரின் முயற்சியை பாராட்டலாம்
ரேட்டிங் : 3 / 5
Comments