top of page

‘’நிறங்கள் மூன்று’’  - விமர்சனம் !

mediatalks001

அதிகாலையில் பள்ளி மாணவன் துஷ்யந்த் டியூஷனுக்கு செல்லும் போது ஒரு இளம்பெண் காரில் கடத்தப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

குழப்பமான சூழலில் பள்ளியில் இருக்கும்போது அவருக்கு வகுப்பு எடுக்கும் 

ஆசிரியரான ரஹ்மான் மகள் அம்மு அபிராமி அதிகாலையில் காணாமல் போனதை ஒரு வேளை காலையில் கடத்தப்பட்ட பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நண்பர்களுடன் அம்மு அபிராமி தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார் .

மற்றொரு  பக்கம் அதர்வா தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும்என்றுபோராடி வருகிறார்.

அதே நேரத்தில் அவர் அதிகாலை உதவியாய் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுக்கும் போது காரில் ஒரு பெண்ணை கடத்துவது போல் காட்சியை எடுக்கிறார்.

இதே நேரத்தில் அதர்வா எழுதிய கதையை முன்னணி இயக்குனரான ஜான் விஜய்  வசன புத்தகத்தை திருடி படமாக எடுக்க, போதையான புகையில் அதர்வா மிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார் .

இன்னொரு பக்கம் பணத்திற்கு ஆசைப்படும் இன்ஸ்பெக்டரான  சரத்குமார் வயதான பெண்ணை காரில் இடித்து காயப்படுத்திய அமைச்சர் சந்தான பாரதியின் மகனை கைது செய்து லத்தியால் அடித்து பின்னுகிறார் .


 இந்நேரத்தில் அதிகாலையில் அதர்வா எடுத்த காட்சியை பள்ளி மாணவன் துஷ்யந்த் பார்த்ததால் அதர்வா தான் தன் தோழியை கடத்தினார் என துஷ்யந்த் அதர்வாவை தேடி அவர் வீட்டுக்கு செல்கிறார் .


ஒரு கட்டத்தில் ரஹ்மான் காணாமல் போன மகளை கண்டுப்பிடித்து தருமாறு  போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர்  சரத்குமாரிடம் புகார் அளிக்க ரஹ்மான் மகளை பற்றிய விசாரணையில் இறங்குகிறார் சரத்குமார் .


முடிவில் அதிகாலையில் காணாமல் போன அம்மு அபிராமியை கடத்தியது யார் ? பள்ளி மாணவன் துஷ்யந்த் அம்மு அபிராமியை தேடுவதற்கான காரணம் என்ன ? வசன புத்தகத்தை திருடி படமாக எடுத்த ஜான் விஜய்யை அதர்வா என்ன செய்தார் ? என்ற கேள்விகளுக்கு மூன்று கதைகளின் சம்பவங்களை ஒரே புள்ளியில் இணைக்கும் படம்தான் ‘’நிறங்கள் மூன்று’’ 

போலீஸ் இன்ஸ்பெக்டராக சரத்குமார் , அவரது மகனாக உதவி இயக்குனர் கதாபாத்திரத்தில் அதர்வா ,ஸ்கூல் மாஸ்டராக ரஹ்மான் அவரது மகளாக அம்மு அபிராமி , பள்ளி மாணவனாக துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் ,சின்னி ஜெயந்த் , சந்தான பாரதி,ஜான் விஜய்  என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .


ஜாக் பிஜோய் இசையும் , டிஜோ டாமி ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.



மூன்று கதைகளை  ஒரே புள்ளியில் இணைத்து விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன் .


ரேட்டிங் - 3 / 5








Comments


©2020 by MediaTalks. 

bottom of page