top of page

‘படவா' - விமர்சனம்

mediatalks001

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மரகாத்தூர் கிராமத்தில் நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு வெட்டியாக ஊர் சுற்றி வருவதோடு, கிடைக்கும் பொருட்களை திருடி விற்பது, கிராம மக்களுக்கு தொல்லை  கொடுப்பது என எதை பற்றியும் கவலை படாமல் ஊதாரி தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

இந்நிலையில் தொல்லை தாங்க முடியாத கிராம மக்கள் விமலை  நாடு கடத்த முடிவு செய்து , மொழி பணம் வசூலித்து அதன் மூலம் மலேசியாவில் வாழும் ராமரின் உதவியுடன் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். 

ஆனால், அங்கு விமல் செய்து வந்த வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார். 

மலேசியாவில் இருக்கும் ராமர் கிராமத்தில் உள்ள சூரியிடம் விமலுக்கு மலேசிய லாட்டரியில் பத்து கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது என பொய்யை சொல்ல ,,, உடனே சூரி அதனை கிராம மக்களிடம் சொல்லி விட விமலை கண்டால் பயந்து ஓடும் கிராம மக்கள், இந்த முறை மாலை மரியாதையுடன் அவரை வரவேற்பதோடு, அவரை கிராம ஊராட்சி தலைவராகவும் தெர்ந்தெடுக்கிறார்கள்.

இந்நேரத்தில் கிராமம் எங்கும் கருவேல மரங்கள் வளர்வதற்கான விதைகளை விதைத்து கிராம நிலத்தை விவசாயத்திற்கு பா திப்பை ஏற்படுத்தும் வறண்ட நிலமாக மாற்றுகிறார் செங்கல் சுளை அதிபரான கே ஜி எப் ராம் .

வில்லனான கே ஜி எப் ராமை எதிர்த்து கருவேல மரங்களை முழுவதுமாக அழித்து மக்களுடன் சேர்ந்து  கிராம ஊராட்சி தலைவரான விமல்  மரகாத்தூர் கிராமத்தை பார்ப்பவர்கள் பாராட்டும் கிராமமாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்கிறார் .

முடிவில் கிராம ஊராட்சி தலைவரான விமல்  மரகாத்தூர் கிராமத்தை  அனைவரும் பாராட்டும் கிராமமாக மாற்றினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘படவா’.

 

நாயகனாக நடிக்கும் விமல் வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியை கண்டதும் காதல் கொள்வது, கிராமத்துக்காக வில்லனை எதிர்ப்பது என படத்தின் நாயகனாக வழக்கமான பாணியில் எந்த ஒரு வித்தியாசத்தையும் வெளிபடுத் தாமல் நடித்துள்ளார் 

 

விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என்று பயணித்து படம் முழுவதும் வருகிறார்.சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்  

நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ், விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம், சூப்பர் குட் சுப்பிரமணி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

 

ஜான் பீட்டரின் இசையில் பாடல்களுடன், பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு தரம்   

சமுக பொறுப்புடன் விவசாய நிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீம கருவேல

மரங்களை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக திரைக்கதையில் சொல்வதுடன் முழுக்க நகைச்சுவை கலந்த கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கே.வி.நந்தா  

 

ரேட்டிங்- 3 / 5

 

Comments


©2020 by MediaTalks. 

bottom of page