top of page

‘அஸ்திரம்’ - விமர்சனம்


பொது மக்கள் மத்தியில் கொடைக்கானல் பூங்கா ஒன்றில் இளைஞன் ஒருவன் தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்தி கிழித்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். 


தொடர் தற்கொலைகளின் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை உணர்ந்து,  கொடைக்கானலில் காவல் அதிகாரியாக இருக்கும்   ஷாம் இந்த மர்ம வழக்கை விசாரிக்க மேலதிகாரியிடம் அனுமதி கேட்கிறார் .


உயர் அதிகாரி அவருக்கு அனுமதி வழங்க, சுமந்த் என்ற  கான்ஸ்டபிளின் உதவியோடு தனது விசாரணையை தொடங்கும் ஷாமுக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நேரத்தில் அவருடன் படித்த  கல்லூரி நண்பர் ஒருவர் ஷாமை வீட்டில் சந்திக்கிறார். 


ஷாம் விசாரித்துக் கொண்டிருக்கும் தற்கொலை சம்பவங்கள் பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை சொல்வதோடு, திடீரென்று அவரும், அவரை தேடி அங்கே வரும் மற்றொருவரும் அதே முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 


இதனால், காவல்துறைக்கு பெரிய சிக்கலை  ஏற்படுவதோடு, அந்த வழக்கில் இருந்து ஷாம் விடுவிக்கப்பட்டு மேலதிகாரி உத்தரவில் கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். 


இந்த வழக்கில் இருந்து ஷாம் விடுவிக்கபட்டாலும்  தன்னை சுற்றி நடக்கும் தொடர் தற்கொலை சம்பவங்களுக்கும், அது பற்றிய சில தடயங்கள் மற்றும் தகவல்கள் தன்னை தேடி வருவதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்பதை கண்டுபிடிக்கும்  ஷாம், அதன் முழுமையான பின்னணியை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்குகிறார் .


முடிவில் இந்த கொடூரமான  ஒவ்வொருவரது தற்கொலையின் பின்னணியில் உள்ள மர்ம மனிதன் யார் என்பதை ஷாம் கண்டுபிடித்தாரா ? இல்லையா ?    என்பதுதான் ‘அஸ்திரம்’.  படத்தின் கதை .


காவல்துறை அதிகாரியாக ஷாம் இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப் படுத்துகிறார்   

கதைகேற்றபடி கதாநாயகியாக நடித்திருக்கும் நிரா


காவலராக நடித்திருக்கும்  சுமந்த், மனநல மருத்துவராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர் நடிப்பில் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

 

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

 

ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு தரம்.  

 

ஜப்பான் மன்னனின்  கதையை மையப் படுத்தி எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர்  அரவிந்த் ராஜகோபால்.


ரேட்டிங் - 3 / 5





Comments


©2020 by MediaTalks. 

bottom of page