‘வீர தீர சூரன் - பாகம் 2’ - விமர்சனம்
- mediatalks001
- Mar 29
- 2 min read

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாருதி பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடு மிக பெரிய தாதாகளாக வலம் வருகின்றனர் .
ஒரு இரவு நேரத்தில் மனைவி மற்றும் மகளை காணவில்லை என ஒருவர் இருவர் மீது போலீஸ் அதிகாரி எஸ் பி எஸ் ஜே சூர்யாவிடம் புகார் கொடுக்கிறார்.
இந்த வழக்கை கையில் எடுக்கும் போலீஸ் அதிகாரி எஸ் பி எஸ் ஜே சூர்யா முன் பகை காரணத்திற்காக ரவுடியான பெரியவர் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரை அன்றிரவே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார்
இதன்பின் மேலூர் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் விக்ரம் இவரது மனைவி துஷாரா விஜயன் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் .
.பெரியவரின் விசுவாசியாக இருந்த விக்ரம் இதற்கு முன்பு சம்பவம் ஒன்று செய்ய இனிமேல் அது போன்ற வேலைகளை செய்ய கூடாது என முடிவெடுத்து தாதாவான பெரியவரை விட்டு விலகி மும்முரமாக மளிகை வியாபாரத்தை கவனித்து வருகிறார் .
இந்நேரத்தில் போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யாவின் என்கவுண்டரில் இருந்து தப்பிப்பதற்காக, மளிகை கடை நடத்தி வரும் விக்ரமின் உதவியை மாருதி பிரகாஷ்ராஜ் நாடுகிறார்.
குடும்பம், பிள்ளைகள் என வாழ்ந்துக் கொண்டிருக்கும் விக்ரம் முதலில் மறுத்தாலும், குடும்பத்தை காரணம் காட்டி மாருதி பிரகாஷ்ராஜ் மிரட்டுவதால் அவர்களை காப்பாற்ற சம்மதித்து களத்தில் இறங்குகிறார்.
முடிவில் பெரியவர் குடும்பத்துக்கும் போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே இருக்கும் முன் பகை என்ன ? ,
பெரியவரான மாருதி பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடுவை போலீஸ் எஸ்.பி எஸ்.ஜே.சூர்யாவின் என்கவுண்டரில் இருந்து விக்ரம் அவர்கள் இருவரையும் காப்பாற்றினாரா ? இல்லையா என்பதை சொல்லும் படம்தான் ‘வீர தீர சூரன் - பாகம் 2’.
காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் மிரட்டலான நடிப்பில் குடும்பத்தின் மீது காட்டும் பாசம், குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் நிலையை வெளிக்காட்டிய விதம், பயம், கோபம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் இயல்பான நடிப்பில் வெளிபடுத்தி ஆக்க்ஷனில் அதிரடி நாயகனாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் .
கதைகேற்றபடி மிக சிறப்பான நடிப்பில் விக்ரமின் மனைவியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன்,
திரைக்கதைக்கு பக்க பலமாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா,
முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மாருதி பிரகாஷ்ராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு, பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இரவுக் காட்சிகளில் கையாண்டிருக்கும் லைட்டிங் பிரமிக்க வைக்கிறது. ஒரு இரவில் பல சம்பவங்கள் நடந்தாலும், அவற்றை மிக நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை கதையாக கொண்டு விறுவிறுப்பாக நாயகன், வில்லன், போலீஸ் என அவர்களிடையே பயணிக்கும் சூழ்ச்சி பகை,,, காளி யார்? என்ற பிளாஷ்பேக் ,,,,, காளியின் மிரட்டலான சம்பவம் மற்றும் காளியின் அதிரடி சண்டைக்காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் அம்சங்களுடன் அசத்தலான திரைக்கதை அமைப்பில் மாஸ் கமர்ஷியல் அதிரடி ஆக்க்ஷன் படமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ் யு அருண்குமார்
‘வீர தீர சூரன் - பாகம் 2’ ரசிகர்கள் கொண்டாடும் ஆக்க்ஷன் திருவிழா
ரேட்டிங் - 3.5 / 5
Comments