top of page

’அறம் செய்’ - விமர்சனம் !


மருத்துவ மேற் படிப்பு படிப்பதற்காக போரூர் அரசு மருத்துவ கல்லூரியில்  பாலு எஸ் வைத்யநாதன், மேகாலி மீனாட்சி மற்றும் லொள்ளு சபா ஜீவா ஆகியோர் ஒன்றாக படித்து வருகின்றனர். 


மற்றொரு பக்கம்  அறம் செய் என்ற அரசியல் அமைப்பை நடத்தி வரும் நாயகி அஞ்சனா கிர்த்தி ஆட்சி மாற்றத்தை விட அரசியல் மாற்றம்  ஏற்பட வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது.


இந்நிலையில் தமிழக அரசாங்கம் இந்த அரசு மருத்துவக் கல்லூரியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும்போது  பாலு வைத்யநாதன் மற்றும் லொள்ளு  சபா ஜீவா  எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


ஒரு கட்டத்தில் பாலு வைத்யநாதன் மற்றும் லொள்ளு  சபா ஜீவா கல்வித்துறை அமைச்சரிடம் முறையிடுகின்றனர். ஆனால், இவர்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறார் கல்வி அமைச்சர். 


இதனையடுத்து பாலு வைத்யநாதன்  தன்னோடு படிக்கும் கல்லூரி மாணவர்கள் சிலரை சேர்த்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் இறங்குகிறார்



இதனையடுத்து அரசாங்கத்தை எதிர்த்து  அஞ்சனா கீர்த்தி அரசியல் மாற்றத்திற்காக தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நிகழ்த்த முயற்சி எடுத்து வருகிறார்.


முடிவில் மருத்துவ கல்லூரியை மீட்க நடத்திய போராட்டத்தில் பாலு வைத்யநாதன்  வெற்றி பெற்றாரா? இல்லையா? அரசியல் மாற்றம் வேண்டி அஞ்சனா கீர்த்தி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதா ? இல்லையா? என்பதை  சொல்லும் படம்தான்  ’அறம் செய்’ 

படத்தை இயக்கி நாயகனாக நடித்திருக்கும் பாலு வைத்யநாதன்  .மருத்துவ கல்லூரி மாணவராக சமூக அக்கறையான கதையை தேர்ந்தெடுத்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் .


அரசியல் மாற்றம் வேண்டி போராட்டம் நடத்துபவராக  வரும் அஞ்சனா கீர்த்தி துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனம் பெறுகிறார்


நாயகியாக வரும் மேகாலி மீனாட்சி பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக இருக்கிறார் .

குணச்சித்திர வேடத்தில் வரும் லொள்ளு சபா ஜீவா , ஜாக்குவார் தங்கம், பயில்வான் ரங்கநாதன்,  திருச்சி சாதனா என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.


ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. 


இயக்குனரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.


அரசியல் மாற்றம் வேணடும் என்ற கருத்தை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பாலு எஸ்.வைத்தியநாதன். அவரது முயற்சியை பாராட்டலாம் .  


ரேட்டிங் - 2.5  /  5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page