’தி டோர்’ - விமர்சனம்
- mediatalks001
- Mar 30
- 1 min read

சென்னையில் ஜெயபிரகாஷ் தலைமையில் இயங்கும் நிறுவனத்தில் கட்டிடக்கலை நிபுணரான பாவனாவின் மேற்பார்வையில் புதிய அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் வேலை நடந்து வருகிறது .
அதற்காக அந்த இடத்தில் இருக்கும் பழமையான கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வக்கீலான பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார்.
தந்தை இறந்த சோகத்தில் இருக்கும் பாவனா சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் தன் வேலையை தொடங்கும் போது, அவரைச் சுற்றி சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்நிலையில் பாவனா தங்கியிருக்கும் வீட்டில் அமானுஷ்யம் ஒன்று அடிக்கடி பாவனா முன் தோன்றுகிறது .
ஒருநாள் பாவனா வேலை விஷயமாக அந்த அடுக்குமாடி கட்டிடத்திற்கு செல்ல அங்கு ஒருவர் மர்மமான முறையில் இறக்கிறார்.
இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராம் விசாரணை மேற்கொள்கிறார்.
புதிய கட்டிடம் கட்டும் அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ள பாவனா யாரை பார்க்க போகிறாரோ அவர்கள் எல்லாம் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
இதனையடுத்து இந்த கொலைகளுக்கு காரணம் பாவனா என அவர் மீது சந்தேப்படுகிறார்.போலீஸ் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராம்
முடிவில் பாவனா பணி மேற்கொள்ளும் புதிய அடுக்குமாடி கட்டிடத்தில் மர்மமாக நடக்கும் தொடர் கொலைக்கான காரணம் என்ன?
யார் அந்த அமானுஷ்யம்.? பாவானவிற்கும் இந்த கொலைகளுக்கும் தொடர்பு உண்டா? என்பதை சொல்லும் படம்தான் ’தி டோர்’
கட்டிடக்கலை நிபுணராக வரும் நாயகி பாவனா அனுபவ நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராம், ஜெயபிரகாஷ் மற்றும் சிவரஞ்சனி ஆகியோருடன் சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் வருண் உன்னியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
கெளதம்.ஜி, ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
வழக்கமான பழி வாங்கும் பேய் கதையுடன் திகில் , சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜெய்தேவ்
ரேட்டிங் - 3 / 5
Comments