top of page

‘குட் பேட் அக்லி' - விமர்சனம்

 


2008 ஆம் ஆண்டு மும்பை தாதாவான ரெட் டிராகன் என  அழைக்கப்படும் அஜித் குமார் மனைவி திரிஷாவுக்கு குழந்தை பிறந்த போது மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்க்கும் சமயத்தில்,,, கோபப்படும் திரிஷாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறையில் கைதியாக தண்டனை அனுபவிக்கிறார் .


பிரபு ,பிரசன்னா  மற்றும் தன் மகனுடன் ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் திரிஷா

அஜித் குமார் சிறையில் இருப்பதை மகனுக்கு மறைத்து பிசினஸ் மேனாக வெளி நாட்டில் வாழ்வதாக பொய் சொல்லி வளர்க்கிறார் .


18 வருடங்களுக்கு பிறகு மகனின் பிறந்த நாளுக்காக தண்டனை முடிந்து ஸ்பெயினுக்கு வரும்   அஜித்குமாருக்கு மிக பெரிய அதிர்ச்சியாக  போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் அஜித் குமாரின் மகன் கைது செய்யப்பட்டு அந்நாட்டு போலீசாரால் சிறையில் அடைக்கப்படுகிறார்.


எதிரிகளின் திட்டமிட்ட சதியால் சிறையில் தண்டனை அனுபவிக்கும் தனது மகனை காப்பாற்றுவதற்காக  மீண்டும்  ரெட் டிராகன் ஆக உருமாறுகிறார் A K வான அஜித் குமார் 


முடிவில் போதை வழக்கிலிருந்து சிறையில் இருக்கும் தன்  மகனை அஜித் குமார் காப்பாற்றினாரா ?

அஜித் குமாரின் மகன் போதை வழக்கில் கைதானதற்கு காரணமான முக்கிய நபர் யார் ? என்பதை சொல்லும் படம்தான் ரசிகர்கள் கொண்டாடும் அதிரடி ஆக்க்ஷன் படைப்பான ‘குட் பேட் அக்லி.


மும்பை டானாக ரெட் டிராகன்   A K என அதிரடி மாஸ் நாயகனாக  அஜித் குமார் படம் முழுவதும்  ரசிகர்கள் கொண்டாடும் படி ஆக் க்ஷன் விருந்து படைக்கிறார் .

கதையின் நாயகனாக  உணர்வுபூர்வமாக மகன் மீதான செண்டிமெண்ட் , வசன உச்சரிப்பு, ஆக்க்ஷன் என அனைத்திலும் ரசிகர்களின்  விசிலில் தியேட்டரில் அனல் பறக்கிறது  


வழக்கமான நடிப்பில் அஜித்குமாரின்  மனைவியாக நடித்திருக்கும் திரிஷா 


கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், இரட்டை வேடங்களில் ஜானி மற்றும் ஜாமி என அசத்தலான நடிப்புடன் “ஒத்த ரூபாய் தாரேன்...” மற்றும் “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா...’ ஆகிய பாடல்களுக்கு ஸ்டைலிஷான குத்தாட்டம் போட்டு  ரசிகர்களை ஆட வைக்கிறார்.


பிரபு ,சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், சாயாஜி ஷிண்டே ,சிறப்பு தோற்றத்தில் சிம்ரன் ,கிங்ஸ்லி ,ஜாக்கி செராப் ,அவினாஷ் ,யோகிபாபு என நடித்த நடிகர்கள் அனைவரும் திரைக்கதைக்கு பக்க பலம் .


தரமான காட்சிகளாக ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின்

ஒளிப்பதிவு. 


ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் ரீமேக் செய்யப்பட்ட பழைய குத்து பாடல்கள் சூப்பர் . பின்னணி இசை மிரட்டல் . 


அஜித்குமார் என்கிற ஆளுமையான நாயகனின் படமாக அதிரடி ஆக்க்ஷனுடன் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில்  படத்தை இயக்கியுள்ளார்  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்  


ரேட்டிங் - 4  / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page