‘நிழற்குடை’ - விமர்சனம்
- mediatalks001
- May 10
- 2 min read

இலங்கை இறுதி போரில் தன் குடும்பத்தை பறி கொடுத்த ஈழத்தமிழரான தேவயானி சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விஜித் – கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை சரியாக பார்த்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதற்கு முன் தங்களது வீட்டில் குழந்தையை பார்த்து கொள்ள ஒரு இளம்பெண்ணை வேலைக்கு அமர்த்த ,,,, அந்த பெண் குழந்தைக்கு தூக்க மருந்தை கொடுத்து தன் காதலனை வரவழைத்து அந்த விட்டில் உல்லாசமாக இருப்பதை தெரிந்து கொண்டவிஜித் – கண்மணி தம்பதிகள் அவளை வேலையை விட்டு துரத்துகின்றனர் .
இந்நிலையில் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக தேவயானி இவர்கள் வீட்டிற்கு வருகிறார். குழந்தையை அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்கிறார்.
இந்நேரத்தில் வேலையுடன் அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் விஜித் – கண்மணி தம்பதிக்கு விசா கிடைத்துவிடுகிறது.
இதனையடுத்து குழந்தை மேல் அதிகளவு பாசத்துடன் கவனித்து கொண்ட தேவயானி குழந்தையை பிரிய வேண்டுமே என்ற மன வேதனையில் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் விஜித் – கண்மணி இருவரும் அமெரிக்கா செல்வதை முன்னிட்டு தன் நண்பர்களுக்கு விருந்து வைக்கிறார்கள் .
அந்த இரவு நேரத்தில் குழந்தை திடீரென்று காணாமல் போகிறது. அதிர்ச்சியில் உறைந்த தேவயானியும் குழந்தையின் பெற்றோரும் இன்ஸ்பெக்டரான இளவரசு பணி புரியும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள்.
முடிவில் இன்ஸ்பெக்டரான இளவரசுவின் தீவிர விசாரணையில் காணாமல் போன குழந்தை கிடைத்ததா ?
விஜித் – கண்மணி இருவரும் அமெரிக்கா சென்றார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘நிழற்குடை’
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிம்மாவாக நடித்திருக்கும் தேவயானி இயல்பான அனுபவ நடிப்பில் . குழந்தையிடம் காட்டும் அன்பும், அக்கறையும் , பெற்றோர்களுக்கு கொடுக்கும் அறிவுரை என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தம்பதிகளாக வரும் விஜித் மற்றும் கண்மணி இருவரும் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர் இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பு பார்ப்பதற்கு அழகு
ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன், மனோஜ்குமார் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.
ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருமணமான இன்றைய தலைமுறையினரின் மனநிலையை கதையாக கொண்டு குழந்தைகளை பெற்றோர்கள் அக்கறையோடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்வதுடன் சமுக அக்கறையுடன் அனைவரும் ரசிக்கும் குடும்ப படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா ஆறுமுகம்.
ரேட்டிங் - 3 / 5
Comments