top of page

’ஜோரா கைய தட்டுங்க’ - விமர்சனம்

  • mediatalks001
  • 2 days ago
  • 1 min read

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மேஜிக் நிபுணரான யோகிபாபு அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு மேஜிக் செய்து தன் பிழைப்பை நடத்தி வருகிறார்.  .


யோகிபாபுவின் தந்தை மேஜிக்கில் சிறந்தவராக இருக்கிறார். அதே நேரத்தில் பொது மக்கள் முன்னிலையில் . ஒரு  ரிஸ்கான மேஜிக் செய்யும் போது ஏற்படும் விபத்தினால் யோகிபாபுவின் தந்தை இறந்து விடுகிறார்.


இதனால் அதிர்ச்சி அடையும் யோகிபாபு, தந்தையின்  இறப்புக்கு பின் அவரது தொழிலை செய்து வந்தாலும் அவருக்கு  சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை, 


இந்நிலையில்  ஒரு சேனலில் வரும் செய்தி முலமாக சாந்தி ராவ் அறிமுகம் கிடைக்கிறது. யோகிபாபுவின் மேஜிக் வருமானத்திற்கு அவர் உதவி செய்கிறார்.


ஒருநாள் யோகிபாபு தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில், முன்று இளைஞர்கள் யோகிபாபுவை அடிக்கடி அவரது தொழிலை கிண்டல் செய்தும் ,தேவையில்லாத பிரச்சனைகள் செய்தும் அவரை வெறுப்பேற்றுகின்றனர் .


இதனையடுத்து  யோகிபாபுவுக்கு பிரச்சனை செய்யும் ஒருவன் மர்ம மான முறையில் இறந்து போகிறான் . அதன் பிறகு அங்கு சில கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. 


இந்த கொலை வழக்கை விசாரிக்கும்   ஹரீஷ் பெராடி. முதற் கட்ட விசாரணை மேற் கொள்ளும்  போது சில மாதங்களாக யோகிபாபு காணாமல் போனது அவருக்கு தெரிய வருகிறது .


முடிவில் இந்த கொலைகளை செய்த மர்ம நபர்  யார்.?

காணாமல் போன யோகிபாபுவை போலீசார் கண்டுபிடித்தார்களா ? இல்லையா?

என்பதை சொல்லும் படம்தான்  ’ஜோரா கைய தட்டுங்க’ .


மேஜிக் நிபுணராக நடித்திருக்கும் யோகிபாபு தனது வழக்கமான காமெடியின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான சில செண்டிமெண்ட் காட்சிகளில் யோகிபாபு இயல்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .



கதாநாயகியாக வரும் சாந்திராவ், போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் பெராடி, யோகி பாபுவின் உதவியாளராக வரும் கல்கி, அருவிபாலா,வசந்தி, மணிமாறன், தயாரிப்பாளர்  ஜாகீர் அலி  என படத்தில்  நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .


இசையமைப்பாளர்  எஸ்.என்.அருணகிரி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. 


மது அம்பர்ட் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் . 


மேஜிக் கலைஞன் ஒருவனது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வேகமில்லாத திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வினிஷ் மில்லினியம்.  



ரேட்டிங் - 2.5  / 5


Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page