’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ - விமர்சனம்
- mediatalks001
- 22 hours ago
- 2 min read

தமிழ் சினிமா திரையரங்கில் வெளியாகும்போது அந்த படத்தை பார்க்கும் சினிமா விமர்சகர்கள் யூடியூப்பில் அந்த படத்தின் விமர்சனத்தை நெகடிவாக சொல்லும்போது சினிமா விமர்சனத்தை பார்க்கும் மக்கள் தியேட்டருக்கு வராமல் முக்கிய காரணமாக இருக்கும் சினிமா விமர்சனம் செய்யும்
யூ டியூபர்களை ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி என்கிற பெயரில் அவர்களது கண்ணுக்கு மட்டும் ஜொலிக்கும் பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து பேயாக இருக்கும் செல்வராகவன் கொலை செய்து வருகிறார்.
இந் நேரத்தில் யூடியுப் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சினிமா விமர்சகர் சந்தானத்திற்கு ஒரு திரைப்படத்தின் சிறப்பு காட்சி குடும்பத்துடன் வர அழைப்பு வருகிறது.
அழைப்பின் பேரில் அந்த தியேட்டருக்கு செல்லும் சந்தானத்திற்கு மட்டும் பாழடைந்த தியேட்டராக தெரிகிறது .
அந்த தியேட்டரை பார்த்ததும் அங்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்த சந்தானம் அப்பா நிழல்கள் ரவி அம்மா கஸ்தூரி தங்கை யாஷிகா ஆனந்த் மற்றும் காதலி கீதிகா திவாரி என அனைவரும் சிறப்பு காட்சியின் அழைப்பின் பேரில் ஜொலிக்கும் தியேட்டருக்கு சென்றிருப்பதை தெரிந்து கொண்டதும் அவர்களை காப்பாற்ற அங்கு செல்கிறார்.
அந்த நேரத்தில் வீண் பேச்சு மொட்டை ராஜேந்திரனும் அங்கு செல்ல அவரும் சந்தானமும் தியேட்டரில் சிக்கி கொள்கிறார்கள்
அவரது குடும்பமோ அந்த தியேட்டரில் திரையிடப்படும் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாக சிக்கிக் கொள்கிறார்கள். அதில் ரெடின் கிங்லியும் , கெளதம் வாசு தேவ மேனனனும் இருக்கிறார்கள் .
இதை தெரிந்து கொண்ட சந்தானம் செல்வராகவனிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார்.
முடிவில் சந்தானம் செல்வராகவன் பேயிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’
சினிமா யூடியூப் விமர்சகராக நடித்திருக்கும் சந்தானம் வழக்கமான பாணியில் காதல்,காமெடி,ஆக்க்ஷன்,நடனம் என கதையின் நாயகனாக தன் கதாபாத்திரத்தை நடிப்பில் பூர்த்தி செய்கிறார் .
திரைக்கதைக்கு துணையாக மொட்டை ராஜேந்திரன் காமெடி படத்திற்கு பலம் சேர்க்கிறது.
காதலி மற்றும் பேயாக நடித்திருக்கும் நாயகி கீதிகா திவாரி , அப்பாவாக நிழல்கள் ரவி, அம்மாவாக கவர்ச்சியான கஸ்தூரி,இளசுகளை ஏங்க வைக்கும் யாஷிகா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், பேயாக வரும் செல்வராகவன், லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு காட்சிகள் கதைகேற்றபடி உள்ளது .
பேய் கதையிலேயே வித்தியாசமான கதையாக திரைப்படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் குடும்பத்தை நாயகன் காப்பாற்றுவதை மைய கருவாக வைத்து காமெடி கலந்த திரைக்கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ் பிரேம் ஆனந்த் .
ரேட்டிங் - 3 / 5
Comments