’வேம்பு’ - விமர்சனம்
- mediatalks001
- May 25
- 1 min read
Updated: May 26

நாயகன் ஹரிகிருஷ்ணன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார் .
இந்நிலையில் மாமன் மகளான முறை பெண் நாயகி ஷீலா கல்லூரி படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார்.
சிலம்ப விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஷீலா அதை நன்கு கற்றுக் கொள்கிறார்.
தேசிய அளவில் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் நேரத்தில்,,, ஹரிகிருஷ்ணனுக்கு, ஷீலாவை திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள்.
பெரியவர்கள் நிச்சயித்தபடி இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
ஒரு நாள் கோவிலுக்கு சென்று விட்டு ஹரிகிருஷ்ணனும் ஷீலாவும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டு ஹரிகிருஷ்ணனுக்கு கண்பார்வை பறிபோகிறது.
இதற்கு பின் ஹரிகிருஷ்ணனுக்கு கண்பார்வை பறி போனதால் ஷீலா குடும்ப பொறுப்பை ஏற்கிறார் .
முடிவில் நாயகி ஷீலா சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்தாரா?
விபத்தினால் ஹரிகிருஷ்ணனுக்கு பறி போன கண் பார்வை மீண்டும் கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’வேம்பு’
புகைப்பட கலைஞராக நடித்திருக்கும் நாயகன் ஹரிகிருஷ்ணன் இயல்பான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் நாயகி ஷீலா துணிச்சலான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிலம்பம் சுற்றுவது, கற்று கொடுப்பது ,கண் பார்வையற்ற கணவனை பாசமாக பார்த்து கொள்வது என கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ளார் .
அம்மாவாக வரும் ஜானகி , எம்.எல்.ஏவாக வரும் மாரிமுத்து, என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் மணிகண்டன் முரளி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
கிராமத்து அழகை தன் ஒளிப்பதிவில் அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் குமரன்
பெண்களை ஊக்குவிக்கும் கதையாக பெண்களுக்கு கல்வியுடன் சேர்ந்து தற்காப்புக் கலையின் முக்கியத்துவத்தை திரைக்கதையில் அழுத்தமாக சொல்வதுடன் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டுதலைப் பெற்ற படமாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு
ரேட்டிங் - 3.5 / 5
Comments