top of page

’பரமசிவன் பாத்திமா’ - விமர்சனம்

  • mediatalks001
  • 7 days ago
  • 1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சுப்பிரமணியபுரம்-யோகோபுரம் என வெவ்வேறு இடங்களில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


மதத்தின் அடிப்படையில் இரு பிரிவு மக்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.


இந்நிலையில் யோகோபுரத்தில் ஒரு திருமண வரவேற்பு நடைபெற , அந்த நாள் இரவில் கல்யாண மாப்பிள்ளை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு மர்மான முறையில் மரணமடைகிறார்.


இதே நேரத்தில் துபாய் க்கு சென்று சுப்பிரமணியபுரம் கிராமத்துக்கு வரும் கூல் சுரேஷுக்கு திருமணம் நடைபெறும் நிலையில் அவரும் மர்மமான முறையில் மரணமடைகிறார்.


இதனையடுத்து இந்த தொடர் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனி போலீஸ் படை அமைத்து காவல்துறை இன்ஸ்பெக்டரான இசக்கி கார்வண்ணன் தீவிர விசாரணையில் கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் களம் இறங்குகிறார் .


முடிவில் தொடர்ந்து நடக்கும் இந்த மர்ம கொலைக்களுக்கான கொலையாளிகளை காவல்துறை இன்ஸ்பெக்டரான இசக்கி கார்வண்ணன் கண்டுபிடித்து கைது செய்தாரா?


சுப்பிரமணியபுரம் – யோகோபுரம் இருவேறு மதத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’பரமசிவன் பாத்திமா’ .


ஆசிரியராக நடித்திருக்கும் விமல் வழக்கமான நடிப்பில் இயல்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.


நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவி கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .


கிறிஸ்தவ தேவாலய பாதிரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன்,கதாநாயகி அண்ணாக வரும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் கூல் சுரேஷ், மகேந்திரன், ஆதிரா, ஸ்ரீரஞ்சனி, மனோஜ் குமார்,அருள்தாஸ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது. எம்.சுகுமார் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.


கிறிஸ்தவ மதமாற்றத்தை மையமாக வைத்து ஒற்றுமையில்லாத இரு பிரிவு கிராம மக்களிடையே ஏற்படும் மோதல், அதனுடன் காதல், ஆக்க்ஷன்,செண்டிமெண்ட் , ஹாரர் என அனைத்தும் கலந்த கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்


ரேட்டிங் : 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page