top of page

’தக் லைஃப்’ - விமர்சனம்

  • mediatalks001
  • 6 days ago
  • 2 min read

1994 ஆம் ஆண்டு டெல்லியில் தாதாவாக இருக்கும் கமல்ஹாசனுக்கும் எதிரியான மகேஷ் மஞ்சரேக்கருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

பக்க பலமாக கமல்ஹாசனுடன் அவரது அண்ணன் நாசர்,ஜோஜூ ஜார்ஜ்,பகவதி பெருமாள் உடன் இருக்க ஒரு கட்டத்தில்

கமல்ஹாசனையும் அவரது குழுவையும் கொலை செய்ய மகேஷ் மஞ்சரேக்கர் போலீசுடன் சேர்ந்து நடத்திய தாக்குதலில் பேப்பர் போட வரும் குமரவேல் சுடப்பட்டு கொல்லப் படுகிறார் .

அப்போது அனாதையாக இருக்கும் சிறுவனான சிம்புவை கமல்ஹாசன் தன்னுடன் அழைத்து சென்று வளர்ப்பு மகனாக வளர்க்கிறார் .


இந்நிலையில் தாக்குதலின் போது காணாமல் போன சிம்புவிடம் தங்கையை கண்டுபிடித்து தருவதாக சிறுவனான சிம்புவிடம் சத்தியம் செய்கிறார் கமல்ஹாசன்.

சில வருடங்களுக்கு பின் நாசரின் மகள் தன் காதலனால் கர்ப்பமாக, காதலன் தன்னை காதலித்து ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்கிறார் .


நாசரின் மகள் தற்கொலைக்கு காரணமான அரசியல் பலம் கொண்ட ஒருவனின் மகனை சுட்டு கொன்று விடுவதால் சிறைக்கு செல்லும் கமல்ஹாசன் தனக்கு பின் தன் சகாக்களிடம் சிம்புதான் எல்லாமே என அறிவிக்கிறார் .

சில நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளியே வரும் கமல்ஹாசனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது .

அந்த நேரத்தில் சிம்பு தன்னுடன் இல்லாததால் கமல்ஹாசன் அவர் மீது சந்தேகப்படுகிறார்


ஒரு கட்டத்தில் இதை தெரிந்து கொண்ட நாசர் அவர் மேல் இருக்கும் ஆத்திரத்தில் உங்கப்பாவை சுட்டு கொன்றது கமல்ஹாசன்தான் என சிம்புவிடம் சொல்ல,,,, கமல்ஹாசனை கொலை செய்ய சிம்பு,நாசர்,ஜோஜூ ஜார்ஜ் பகவதி பெருமாள் கொலை திட்டம் போட,, அனைவரும் ஓன்று சேர்ந்துஅவருக்கு தெரியாமல் பனி பிரதேச மலைக்கு அழைத்து சென்று அவரை கொலை முயற்சி செய்கின்றனர்.

முடிவில் எதிரிகள் சுட்டதில் தப்பி பிழைக்கும் கமல்ஹாசன் அவர்களை அனைவரையும் பழி வாங்கும் படம்தான் ’தக் லைஃப்’

தாதாவாக ராயர் சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன் அனுபவ நடிப்பில் தாதாவாக,அபிராமியின் கணவனாக , த்ரிஷாவுடன் இயல்பான காதல் என நடிப்பில் முத்திரை பதிக்கிறார் .

கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிலம்பரசன் கதைகேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .

கமல்ஹாசனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, காதலியாக நடிக்கும்

த்ரிஷா, நாசர், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் ,வடிவுக்கரசி ,வையாபுரி ,சின்னி ஜெயந்த் என படத்தில் நடித்த நடித்தவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .

ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் , ரவி கே.சந்திரனின் ஒளிப் பதிவும் படத்திற்கு பக்க பலம் .

நீயா - நானா என தாதாக்களின் தலைமையை பிடிக்க நடக்கும் சூழ்ச்சியை மையமாக கொண்ட கதையுடன் ஆளுமையான நட்சத்திரங்கள் இருந்தும் அழுத்தமில்லாத திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணி ரத்னம் .


ரேட்டிங் : 3 / 5

Comentários


©2020 by MediaTalks. 

bottom of page