பள்ளி பருவ காலத்தில் இருந்தே நாயகி ஹன்சிகா மோத்வானி எதை செய்தாலும் தவறாகவே போய் முடிவதால் தன்னை ஒரு அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணாக நினைத்து வாழ்ந்து வருகிறார் .
கட்டுமான தொடர்புடைய படிப்பினால் ஒரு கட்டத்தில் தொழில் ரீதியாக கட்டுமான வேலை நடைபெறும் இடத்திற்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக அவருடைய காலில் ஆணி குத்தி சிறிய விபத்து ஏற்படுகிறது.
இதனையடுத்து ஹன்சிகா மோத்வானியின் வாழ்வில் திடீர் மாற்றம் நிகழ்கிறது. கிடைக்காத வேலை அவருக்கு கிடைப்பதோடு, அவர் என்ன நினைக்கிறாரோ அத்துடன் அவர் யாரையாவது சபித்தால் அவை அனைத்துமே நடக்கிறது.
ஹன்சிகா மோத்வானிக்கு நல்லது நடக்கும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் சபிக்கப்படும் ஆட்களும் அவரது கண் முன்னே அகால மரணமடைகின்றனர் ..
ஹன்சிகா மோத்வானி திடீர் மாற்றத்திற்கு அந்த அமானுஷ்ய சக்தி தான் காரணம் என்பதை தெரிந்துக்கொள்வதோடு, சிலரை பழிவாங்க அந்த அமானுஷ்யம் தன்னை பயன்படுத்துவதையும் அவர் தெரிந்துக்கொள்கிறார் . ஒரு கட்டத்தில்அந்த அமானுஷ்ய சக்தி பேயாக உருமாறி தன்னை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்க ஹன்சிகா மோத்வானியிடம் தன சோக கதையை சொல்கிறது .
முடிவில் பேயாக உருமாறி தன் சோக கதையை ஹன்சிகா மோத்வானியிடம் சொன்ன அந்த இளம்பெண் யார் ?
ஹன்சிகா மோத்வானி அமானுஷ்ய சக்தியான அந்த இளம்பெண்ணின் வேண்டுகோளுக்கு இணங்க அவரை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்கினாரா ? என்பதை சொல்லும் படம்தான் ’கார்டியன்'
ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக முதல் பாதியில் துறுதுறு பெண்ணாக இரண்டாம் பாதியில் பேயாக நடிப்பில் மிரட்டுகிறார்.
கதாநாயகனாக பிரதீப் ராயன் நடித்திருக்கிறார்.
ஆடிட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஈஸ்வரி ராவின் சாயலில் இருக்கும் தியாவின் நடிப்பு பாராட்டும்படி உள்ளது
வில்லன்களாக சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி நடித்திருக்கிறார்கள்.
மொட்டை ராஜேந்திரன், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்..
அபிஷேக் வினோத், ஷோபனா பிரனேஷ், தியா, பேபி க்ரிஷிதா என நடித்தவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.
கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
ஏற்கனவே பார்த்து பழகி போன..... நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்வதும் அந்த பெண் பேயாக உருமாறி அவர்களை கொல்வதும் என வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதையை வைத்து கிராபிக்ஸ் துணையுடன் பேய் படமாக படத்தை இயக்கியுள்ளனர் இயக்குனர்கள் சபரி - குரு சரவணன்
ரேட்டிங் : 2.5 / 5
Comments