அடர்ந்த மலை காடான கொல்லிமலையில் அரண்மனை காடு என்கிற இடத்திற்கு மலையேற்றத்தில் விருப்பமான நண்பர்களான காயத்ரி சங்கர் ,தேவ் ,ப்ரீத்தி ,மகேஸ்வரன், மற்றும் ஜனா ஆகியோர் சுற்றுலாவுக்கு காரில் செல்கின்றனர்.
அவர்களை மலையேற்றத்துக்கு அழைத்துச் செல்ல, ஊரில் வாழும் வன ஊழியர் பால சரவணன் அவர்களுக்கு துணையாக செல்கிறார்.
அடர்ந்த காட்டுக்குள் செல்லும் வழிபாதையில் காரை நிறுத்தி விட்டு ஆறு பேரும் மலை ஏறுகின்றனர். பாதி வழி சென்றவுடன் தடை செய்யப்பட்ட பகுதி என்ற எச்சரிக்கை பலகையும், அந்த பாதைக்கு செல்லாமல் இருக்க மரகட்டைகளை தடுப்பாகவும் வைத்து இருப்பதை பார்க்கின்றனர்.
எச்சரிக்கை பலகைகளையும் தாண்டி ஐந்து நண்பர்களும் அந்த இடத்திற்கு செல்ல முற்படும் போது வன ஊழியர் பால சரவணன் எச்சரித்து தடுக்கிறார்.
இதனால் நண்பர்கள் குழுவிற்கும் பால சரவணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டாலும் எச்சரிக்கையை மீறி ப்ரீத்தியும் ஜனாவும் தடைப்பட்ட பகுதிக்குள் சென்று ஒரு பாழடைந்த வீட்டை காண்கிறார்கள்.
அவர்கள் அந்த வீட்டை ஆராயும் போது, ஒரு வயதான பெண்ணின் பில்லி சூனியம் பொம்மையைக் கண்டு அதை எடுக்கின்றனர்.
இதனால் 80 வருடங்களாக அடைபட்டு கிடக்கும் சூனியக்கார கிழவியான பேச்சியான சீனியம்மாள் அனுமாஷ்ய சக்தியாக வெளியே வருகிறாள்.
அவர்களை பின் தொடர்ந்து வந்து பயமுறுத்தும் பேச்சியான சீனியம்மாள் இருவரது உயிரை காவு வாங்க முயற்சிக்கிறாள்.
முடிவில் யார் இந்த சூனியக்கார கிழவி பேச்சி ? 80 வருடங்களாக அடைபட்டு கிடந்ததற்கான காரணம் என்ன ? பேச்சியிடம் சிக்கி கொள்ளும் ஐந்து நண்பர்கள் மற்றும் பால சரவணனும் சூனியக்கார கிழவியிடம் தப்பி பிழைத்தார்களா? என்பதை சொல்லும் படம்தான் 'பேச்சி
காடுகளில் நடக்கும் சம்பவங்களை நன்கு அறிந்தவராக வன ஊழியராக பால சரவணன் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார்.
கதையின் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் காயத்ரி சங்கர் ,தேவ், ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, முரளி, மகேஸ்வரன் கே, நாட்டுராஜா, சாந்திமணி என்று அனைவரும் பேய் படத்திற்கான பயத்தை இயல்பான நடிப்பில் மிரள வைத்துவிடுகிறார்கள்.
இவர்களுடன் முக்கிய வேடத்தில் பேச்சி பாட்டியாக சீனியம்மாள் அனுமாஷ்ய சக்தியாக அமைதியாக நடிப்பில் மிரட்டுகிறார்.
ராஜேஷ் முருகேசன் இசையும் , இயற்கையின் பிரம்மாண்டத்தை காட்சிகளால் அசத்தும் பார்த்திபன் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் படத்தை தயாரித்துள்ளனர் .
அடர்ந்த காட்டு மலை பகுதியில் திகிலூட்டும் அமானுஷ்ய சக்தியுடன் வித்தியாசமான பயமுறுத்தும் கதை அமைப்புடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பில் படம் பார்க்கும் ரசிகர்கள் பயமில்லாமல் மிரளும் பேய் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராமச்சந்திரன்.பி.
ரேட்டிங் - 3.5 / 5
Kommentare