தனியார் பள்ளியில் ஊட்டியில் படிக்கும் கெளரவ் காளை சிறந்த கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் . இவரால் அந்த பள்ளிக்கு பெருமை வந்து சேர்கிறது.
இவருக்கு இமாசலம் வரை இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது ஆசை. இவர் படிக்கும் இதே பள்ளியில் சதுரங்க விளையாட்டில் சிறந்த வீரராக இருக்கும் பிரவீன் கிஷோர் புதிய மாணவனாக வந்து சேர்கிறார்
இந்நிலையில் பிரவீன் கிஷோரை அடிக்கடி சீண்டி தொல்லை கொடுக்கும் கெளரவ் காளை ஒரு கட்டத்தில் நண்பராக ஏற்று கொள்ள முடிவு செய்கிறார். ஆனால், இதை புரிந்துக்கொள்ளாத பிரவீன் கிஷோர் அவரிடம் இருந்து தள்ளியே இருக்க நினைக்கிறார்.
ஒரு நாள் பள்ளி மாணவர்கள் பயணிக்கும் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிக்கொள்ள,, அதில் இருந்து சக மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் கெளரவ் காளை, பிரவீன் கிஷோரை காப்பாற்றும் முயற்சியில் பலத்த காயமடைந்து இறந்து விடுகிறார்.
அவரது இறப்புக்கு பிறகு அவர் தன்னுடன் நட்பு பாராட்ட விரும்பியதை அறிந்துக்கொள்ளும் பிரவீன் கிஷோர், குற்ற உணர்ச்சியில் மூழ்கி, கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்.
மறுபக்கம் கெளரவ் காளையின் உடல் உறுப்பு தானத்தால் உயிர் பிழைத்து புதிய வாழ்க்கையை தொடங்கும் எஸ்தர் அனில், கெளரவ் காளைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவரது எதிர்கால ஆசைகளை அறிந்துக்கொண்டு அதை நிறைவேற்றும் எண்ணத்தில் அவர் படித்த ஊட்டி பள்ளியில் சேருகிறார்.
அங்கு குற்ற உணர்ச்சியால் தனக்கே தெரியாமல் கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் பிரவீன் கிஷோரின் நிலையை கண்டு அதிர்ச்சியடையும் எஸ்தர் அனில், அதில் இருந்து அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அதற்காக அவர் பள்ளி பருவத்தையும் தாண்டிய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது .
முடிவில் பிரவீன் கிஷோர் - எஸ்தர் அனில். இருவரும் சேர்ந்து கெளரவ் காளைவின் ஆசையை நிறைவு செய்தார்களா? இல்லையா?என்பதை படம்தான் ’மின்மினி’
சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரவீன் கிஷோர், பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கெளரவ் காளை, பிரவீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்தர் அனில் மூன்று பேரும் கதைக்கேற்றபடி இயல்பாக நடித்துள்ளனர் .
சிறப்பான ஒளிப்பதிவில் குறிப்பாக இமாலய பயணத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு பக்க பலம் .
இந்திய சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமான புதிய முயற்சியாக இயக்குநர் ஹலிதா சமீம் நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியுள்ளார்.
நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கசப்பான சம்பவங்களையும் , அனுபவங்களையும் கடந்து எதை பற்றியும் யோசிக்காமல் வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற ஆழமான கருத்தை வலியுறுத்தி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹலிதா சமீம்.
ரேட்டிங் - 3 / 5
Comments