top of page

’போகுமிடம் வெகுதூரமில்லை’ - விமர்சனம் ! 3 . 5 / 5

mediatalks001

சென்னையில் பிணங்களை ஏற்றி செல்லும் அமரர் ஊர்தி ஓட்டுநரான நாயகன் விமல் நிறைமாத கர்ப்பிணி மனைவியான நாயகி மேரி ரிக்கெட்ஸ்  பிரசவ வலி வர தனியார் மருத்துவ மனையில் சேர்க்கிறார்.


அவசர பிரசவ மருத்துவ செலவிற்காக 25 ஆயிரம் ரூபாய் விமலுக்கு தேவைப்படுகிறது.  


இந்நிலையில் திருநெல்வேலி களக்காடு கிராமத்தை சேர்ந்த  ஒரு முதியவர்  சாலை விபத்தில் இறந்துவிட அவ்ரது உடலை திருநெல்வேலிக்கு எடுத்து சென்று   உரியவரிடம் ஒப்படைக்கும் பொறுப்பு விமலுக்கு கொடுக்கப்படுகிறது.  


இறந்த பெரியவருக்கு இரண்டு மனைவிகள் மூத்த மனைவியின் மகன் ஆடுகளம் நரேன், இளைய மனைவி மகன் பவன் இருவரும் அப்பா உடலை பெற போட்டி போட்டுக் கொள்கிறார்கள்.


திருநெல்வேலிக்கு பெரியவர் உடலை எடுத்துச் செல்லும் வழியில் அமரர் ஊர்தி வாகனம் நின்று விட,,  தெரு கூத்து கலைஞரான கருணாஸ் உதவி செய்ய அவரையும் உடன் அழைத்து செல்கிறார் விமல்  


இதனையடுத்து உயிருக்கு போராடும் ஒரு காதல் ஜோடியை காப்பாற்ற பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்  அதாவது வாகனத்தில் கொண்டு சென்ற பெரியவர் உடல் காணாமல் போகிறது.


முடிவில் காணாமல் போன பெரியவர் உடலை எடுத்து சென்றது யார் ? பெரியவரின் உடல் விமலுக்கு கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான்  ’போகுமிடம் வெகுதூரமில்லை’  


அமரர் ஊர்தி ஓட்டுநரான நடித்திருக்கும் விமல் இயல்பான நடிப்பில் காதல் ஜோடிகளை காப்பாற்றும்போதும்  காணாமல் போன உடலை தேடி அலையும் நேரத்திலும் ,மனைவி மீது வைத்திருக்கும் பாசம் என அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை பாராட்டும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார் விமல்


விமல் மனைவியாக நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.


முக்கியமான கதாபாத்திரத்தில் தெரு கூத்து கலைஞராக குணசித்திர நடிப்பில் நடித்திருக்கும் கருணாஸ் படத்தின்  இறுதி காட்சியில் அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறார் கருணாஸ்


படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .


என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது .


இதுவரை யாரும் சொல்லாத வித்தியாசமான கதை களத்துடன் ஒரே நேர்கோட்டில் செல்லும் திரைக்கதை அமைப்பில் எதிர்பார்ப்போடு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு யாரும் யூகிக்க முடியாத திருப்புமுனையான கிளைமாஸ்க்குடன் படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா



ரேட்டிங் - 3. 5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page