மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வாழும் சூரியின் அக்காள் மகளான முறை பெண் நாயகி அன்னா பென், கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவனை காதலிக்கிறார் .
இவரது காதலை குடும்பத்தினர் ஏற்று கொள்ளாததால் நிலைகுலைந்து இருக்கும் அன்னா பென்னுக்கு பேய் பிடித்து இருப்பதாக நினைக்கும் அவரது குடும்பத்தார், அதில் இருந்து அவரை மீட்பதற்காக குலதெய்வ கோயிலை வழிபட்டுவிட்டு அதன் பின் பால மேட்டில் உள்ள சாமியார் ஒருவரிடம் அழைத்து செல்கிறார்கள்.
அவர்கள் செல்லும் அந்த பயணத்தின் வழியே எதிர்நோக்கும் சம்பவங்களை இன்றும் கிராமத்தில் நடைமுறையில் இருக்கும் பெண்கள் மீது நடத்தும் ஆணாதிக்க அடக்குறை, மூட நம்பிக்கையான மக்களின் அறியாமையை இயல்பாக சொல்லும் படம்தான் ‘கொட்டுக்காளி’.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் அன்னா பென் அமைதியான நடிப்பில் படம் முழுவதும் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
அன்னா பென்னின் மாமனாக நடித்திருக்கும் சூரி கோபமுள்ள மனிதராக படம் முழுவதும் பாண்டி கதாபாத்திரமாக வாழ்கிறார் .
முதன் முறையாக இசை அமைப்பு இல்லாமல் ஒரு படம் இருந்தாலும் காட்சிகள் நடக்கும் பகுதிகளை சுற்றி ஒலிக்கும் ஓசைகளை பின்னணி இசையாக கொடுத்த விதம் குறிப்பாக சுரன்.ஜி மற்றும் எஸ்.அழகிய கூத்தன் ஆகியோரது லைவ் ரெக்கார்டிங் பின்னணி இசை இல்லை, என்ற உணர்வே ஏற்படாத வகையில் பாராட்ட தோன்றுகிறது .
ஒளிப்பதிவாளர் சக்தி ஒளிப்பதிவும் ,படத்தொகுப்பாளர் கணேஷ் சிவாவின் பட தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் .
வித்தியாசமான கதையாக வாகன பயணத்தை மட்டுமே காட்சிகளாக அமைத்து சில இடங்களில் காட்சிகளில் எல்லை மீறினாலும் படம் முழுவதும் கதாபாத்திரங்களின் பயணத்தின் சில நகைச்சுவை காட்சிகளுடன் இறுதியில் முடிவு நம் கையில் என்று இயக்கியிருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்.
ரேட்டிங் - 3 / 5
Comentarios