top of page

நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல் (Nayanthara: Beyond the Fairy Tale) NETFLIX ஆவணப்படம் விமர்சனம் !!


மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா  தமிழ் திரையுலகில் 2005ம் ஆண்டு  கே பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் மூலம் இயக்குனர் ஹரி இயக்கிய ‘’ஐயா’’ படத்தில் சரத் குமார் ஜோடியாக நாயகியாக  அறிமுகமாகி  பல போராட்டங்களுக்கு பின் முன்னணி நடிகையாக தமிழின் ‘’லேடி சூப்பர் ஸ்டார்’’என்கிற பட்டத்துடன் வலம் வரும் நிலையில் 2022ஆம் ஆண்டு அவரது காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நடைபெற்ற ,  காதல் திருமணத்தைப் பற்றி விவரிக்கிறது netflixல் வெளியாகும் ’நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairy Tale) என்ற ஆவணப்படம்.

 

நயன்தாராவின் ஆவணப்படம் என்பதால் தான் காதலித்து தோல்வியடைந்த காதல் கதைகளின் காதல்கள் பற்றி மேலோட்டமாக மட்டுமே பேசியிருப்பதோடு, காதல் விவகாரங்களில் பெண்களை மட்டுமே குற்றம் சொல்லும் சமூகத்தை பற்றியும் தமிழ் சினிமாவில் தான் சந்தித்த பல அவமானங்களை பற்றியும் தன்னுடைய விளக்கமளிக்கும் பேட்டிகளில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நயன்தாரா.

 

‘’நானும் ரவுடிதான்’’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்   விக்னேஷ் சிவன் உடனான காதல் மற்றும் திரையுலக பிரபலங்கள்  கலந்து கொண்ட  திருமணத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தில் தமிழ் ,மலையாளம், தெலுங்கு பட முன்னணி இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் நடிகை ராதிகா பேட்டிகளுடன்,   தன்னுடைய ஆவணப்படமாக இருந்தாலும் காதலன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னிடம் காதலை சொன்ன போது அதை ஏற்று கொண்ட மனநிலையையும் அவரது காதல் வெளியே தெரிந்தவுடன்  வந்த விமர்சனங்களை அவர் எடுத்துக்கொண்ட விதம், தற்சமயம் அவர் மனைவியாக விக்னேஷ் சிவனுக்கு ஏற்றபடி வாழ்வது, போன்றவற்றை சொல்லும்போதும் ,,, குறிப்பாக இயக்குனர்   விக்னேஷ் சிவன் பேட்டிகளில் காதல் வாழ்க்கையில்  சில நேரங்களில் நயன்தாரா தன்னுடன் நடந்து கொண்ட விதங்களை விவரிக்கும்போது ரசிகர்களுக்கு நகைச்சுவை கலந்த சுவாரஸ்யம்.

நாயகியாக அறிமுகமான பின்  நயன்தாரா கடந்து வந்த பாதையை ஆவணப்படமாக இருந்தாலும்  காதலுக்கு பின் அவரது அன்றாட நிகழ்வில் நடந்த சம்பவங்களை ரசிக்கும்படியான நேர்காணலுடன் மிக நேர்த்தியாக  இயக்கியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.


ரேட்டிங் - 3 / 5

 


Comments


©2020 by MediaTalks. 

bottom of page