top of page

’பார்க்கிங்’ (இயல்பான திரைக்கதையுடன் பயணிக்கும் விறு விறுப்பான கார் பார்க்கிங் பிரச்சனை) விமர்சனம்


Cast: Harish Kalyan, Indhuja, MS Bhaskar, Rama Rajendra,Prathana Nathan, Ilango,suresh

Directed By : Ramkumar Balakrishnan

Music By : Sam CS

DOP: Jiju Sunny

Editing:Philomin Raj

Executive Producer : T Murugesan

PRO:Suresh Chandra, Rekha D'One

Produced By : Sudhan Sundaram - KS Sinish

கர்ப்பிணி மனைவியான இந்துஜாவுடன் காதல் திருமணம் செய்துக்கொண்ட ஹரிஷ் கல்யாண் புதியதாக வாடகை வீட்டில் குடி வருகிறார்.

அரசு அதிகாரியான எம்.எஸ்.பாஸ்கர், மனைவி ரமா , மகள் பிரார்த்தனாவுடன் ஹரிஷ் கல்யாண் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் கீழ் பகுதியில் குடியிருக்கிறார் ..

சில நாட்களுக்கு பிறகு கர்ப்பிணி மனைவி இந்துஜாவுக்காக ஹரிஷ் கல்யாண் புதிதாக கார் ஒன்றை வாங்குகிறார்.

அந்த காரை அவர் வீட்டில் இருக்கும் சிறிய இடமான கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்க, ஏற்கனவே அந்த இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த எம்.எஸ்.பாஸ்கருக்கு வண்டியை ஏற்றி இறக்க இட நெருக்கடி ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் வண்டியால் ஹரிஷ் கல்யாணின் புதிய காரில் கீறல் விழுந்து விடுகிறது,,, ஆரம்பத்தில் மன்னிப்புடன் தொடங்கும் பேச்சில் நாட்கள் செல்ல செல்ல ஹரிஷ் கல்யாணின் மேல் உள்ள ஈகோவினால் எம்.எஸ்.பாஸ்கரும் புதிய கார் வாங்க இட பிரச்சனையால் இருவருக்குள்ளும் யுத்தமாக மாறி மோதலாக வெடிக்கிறது .

இருவரது மோதலில் கடும்கோபமான எம்.எஸ்.பாஸ்கர் போலீஸ் ஸ்டேஷனில் ஹரிஷ் கல்யாண் மீது அபாண்டமான பொய் புகார் ஒன்றை அளிக்கிறார் .

பொய் புகாரின் அடிப்படையில் ஹரிஷ் கல்யாணை விசாரிக்கும் போலீஸ் அவரை காவலில் வைக்கிறது .

முடிவில் ஹரிஷ் கல்யாண் திட்டமிட்டு எம்.எஸ்.பாஸ்கர் அலறும்படி செய்த செயல் என்ன ?

அதன் பின் எம்.எஸ்.பாஸ்கர் ஹரிஷ் கல்யாணை ஒழித்து கட்ட செய்த சதி வேலை என்ன ? இறுதியில் இருவரது மன நிலை மாறியதா ? என்பதை சொல்லும் படம் தான் 'பார்க்கிங்'

கதையின் நாயகனாக நடிக்கும் ஹரிஷ் கல்யாண் துடிப்புள்ள இளைஞனாக உடல் மொழியில் அனைத்து உணர்வுகள் கொண்ட உணர்ச்சிமய நடிகராக,,ஆக்ரோஷமான கோபம் இருந்தாலும் அனுபவ நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் படம் முழுவதும் இளம் பரிதி என்ற அரசு அதிகாரியாக வில்லத்தனமான ஈகோ நடிப்பில் அசத்துகிறார் . ஒரு காட்சியில் விஜிலென்ஸ் அதிகாரிகளின் விசாரணையின்போது ரசிகர்களுக்கே வியர்க்குமளவில் இயல்பான இவரது நடிப்பு பாராட்டை பெறுகிறது .

ஹரிஷ் கல்யாணின் மனைவியாக கதைக்கேற்றபடி நடிக்கும் இந்துஜா,

எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடிக்கும் ரமா, மகளாக நடிக்கும் பிரார்த்தனா, வீட்டு உரிமையாளராக நடிக்கும் இளவரசு, சுரேஷ் ,இளங்கோ என நடித்தவர்களின் நடிப்பு இயல்பு .

ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவும் , சாம் சி எஸ் இசையும் படத்திற்கு பக்க பலம் !


சொந்த வீட்டில் இருப்பவர்களும் , வாடகை குடியிருப்பில் இருப்பவர்களும் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையான கார் பார்க்கிங் பிரச்சனையை மையமாக கொண்டு கதையுடன் பயணிக்கும் விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் மனிதாபிமானம் இல்லாத ஈகோவினால் நடக்கும் சம்பவங்களுடன் மனித நேயத்துடன் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்தல்முறை இதுபோன்ற பிரச்சனைகளை எளிதில் தவிர்க்க முடியும் என்கிற இயல்பான கருத்துடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

ரேட்டிங் ; 3.5 / 5Comments


bottom of page