top of page
mediatalks001

‘பீட்சா 3’ - விமர்சனம் !


சொந்தமாக சென்னையில் துரித உணவகம் நடத்தி வருகிறார் அஸ்வின் கக்குமானு .


இந்த உணவகத்தில் இரவு நேரத்தில் சமையல் அறையில் அஸ்வின் கக்குமானுக்கு தெரியாமல் ஒரு அனுமாஷ்ய சக்தியால் அடிக்கடி ஒரு சுவீட் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது . இந்த சுவீட் வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிடும்படி நல்ல வரவேற்பை பெறுகிறது .


இந் நேரத்தில் பவித்ரா மாரிமுத்துவின் அண்ணன் போலீஸ் அதிகாரி கவுரவுக்கு பிடிக்காமல் ஆவிகளிடம் பேசுவதற்கான ‘செயலி ஒன்றை உருவாக்கி வரும் நாயகி பவித்ரா மாரிமுத்துவும் அஸ்வினும் காதலிக்கிறார்கள்.


அஸ்வின் கக்குமானு சந்திக்கும் சில மனிதர்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். தனது காதலி உதவியுடன் தன்னை சுற்றி நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் மர்ம மரணங்கள் பற்றிய பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் அஸ்வின் கக்கமானுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது.


முடிவில் அஸ்வின் கக்கமான் தெரிந்து கொண்ட அதிர்ச்சியான உண்மைகள் என்ன ?


எதற்காக அவரது உணவகத்தில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது ?


அஸ்வின் கக்கமானுக்கும் அமானுஷ்ய சக்திக்கும் என்ன தொடர்பு ? என்பதை சொல்லும் படம்தான் ‘பீட்சா 3’


நாயகனாக நடிக்கும் அஸ்வின் கக்குமான் கதாபாத்திரத்துடன் இணைந்து தன்னை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை நினைத்து குழப்பமடையும் காட்சிகளிலும்,,, சந்தேகத்தின் பேரில் அடிக்கடி காதலியின் அண்ணன் கவுரவ் தொல்லை கொடுக்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .



நாயகியாக வரும் பவித்ரா மாரிமுத்து ஆவிகளுடன் நேரடியாக ‘செயலி மூலம் பேசுபவராக நடிப்பில் திகிலை ஏற்படுத்துகிறார்

நாயகி பவித்ரா மாரிமுத்துவின் அண்ணனாக நடிக்கும் கவுரவ்,அனுபமா குமார், அபி நக்‌ஷத்ரா, கவிதா பாரதி, காளி வெங்கட், வீரா என படத்தில் நடிக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் !

அருண்ராஜ் இசையும் பிரபு ராகவனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !


ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு விபத்தால் மன நிலை மாறும் மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சம்பவத்தை மையமாக கொண்ட திகில் கலந்த கதையுடன் ,,, சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் பவித்ரா மாரிமுத்து ஆவிகளுடன் பேசும் காட்சிகளிலும் ,,அனுமாஷ்ய சக்தி உணவகத்தில் வரும் காட்சிகளிலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு திகிலான பயத்துடன் படபடப்பை ஏற்படும்படி மிரள வைக்கும்

பேய் படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன் கோவிந்த்.


ரேட்டிங் ; 2.5 / 5



Comments


bottom of page