top of page

ஹாட்ரிக் சாதனைவசூலில் படைத்து வரும் 'ஆதி புருஷ்'

  • mediatalks001
  • Jun 20, 2023
  • 1 min read


வசூலில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கும் நடிகர் பிரபாஸ்



பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்.


டீ சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று தினங்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.


பான் இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'பாகுபலி 2' , 'சாஹோ', 'ஆதி புருஷ்' ஆகிய மூன்று படங்களும், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் புதிய சாதனையை நிகழ்த்தி பான் இந்திய வசூல் நட்சத்திரமாக உயர்ந்து பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறார்.


இதனிடையே இவர் தற்போது 'கே. ஜி. எஃப்' படப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'சலார்' எனும் திரைப்படத்திலும், தேசிய விருது பெற்ற இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் 'புராஜெக்ட் கே' எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page