top of page

இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்

  • mediatalks001
  • 8 hours ago
  • 1 min read

ree

பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்


பைசன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


ஜனரஞ்சகமாகவும், கருத்தாளமிக்க படமாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்ற படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


அரசியல் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் படத்தை பார்த்து பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.


திரைத்துறையை சார்ந்த இயக்குனர்கள் , கலைஞர்கள் என பலரும் பைசன் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள்.


இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் பைசன் படத்தை பார்த்துவிட்டு


"மாரி படத்தை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீதான் அந்த பைசன், உன் படைப்பை கண்டு பெருமை கொள்கிறேன், இதை தொடர்ந்துசெய், உன் குரல் முக்கியமானது"


என்று இயக்குனர் மணிரத்னம் மாரிசெல்வராஜை பாராட்டியுள்ளார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page