top of page

நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம் - 'ரெளடி & கோ"

  • mediatalks001
  • Nov 15, 2025
  • 1 min read



நடிகர்கள் சித்தார்த்- ராஷி கண்ணா நடிக்கும் 'ரெளடி & கோ"- நகைச்சுவை நிறைந்த கலாட்டா திரைப்படம்!


கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்படும் தரமான படங்களைத் தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் தற்போது 'ரெளடி & கோ' திரைப்படம் உருவாகியுள்ளது. மனம் விட்டு சிரிக்கும்படியான அட்டகாசமான டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது.


முன்பு சித்தார்த் நடித்த ஆக்‌ஷன் கதையான 'டக்கர்' படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்- சித்தார்த் ஜோடி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை ரொமாண்டிக் காமெடி கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.


உணவு டெலிவரி சர்வீஸ் போல மக்களின் பிரச்சினைகளை கையாளும் கார்பரேட் ரெளடி உலகத்திற்கு ரசிகர்களை 'ரெளடி & கோ' அழைத்து செல்ல இருக்கிறது. சென்னையில் படமாக்கப்பட்ட இந்தக் கதை சிக்கலான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை என இரண்டிற்கும் உத்திரவாதம் அளிக்கிறது.


படத்தின் டைட்டில் குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பகிர்ந்து கொண்டதாவது, "ரெளடிகளின் கார்ப்பரேட் சாம்ராஜ்யம் பற்றிய கதை என்பதால் 'ரெளடி & கோ' என்பதை தலைப்பாக தேர்வு செய்தோம். முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த எண்டர்டெயினராக கதை இருக்கும்.


நடிகர்கள் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் சுனில், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி மற்றும் சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். 'தனி ஒருவன்' புகழ் வம்சி வில்லனாக நடித்துள்ளார்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 15- 20 நாட்களில் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடைந்து விடும். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பான் இந்திய அளவில் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


தொழில்நுட்பக்குழு விவரம்:


ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்,

படத்தொகுப்பு: பிரதீப் E ராகவ்,

கலை இயக்கம்: ஆறுச்சாமி,

இசை: ரேவா,

வடிவமைப்பு: டியூனி ஜான்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page