சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி திறக்கப்படும் தமிழ்நாட்டின் புதிய பொழுதுபோக்கு சகாப்தமான வொண்டர்லா
- mediatalks001
- 2 hours ago
- 4 min read

தமிழ்நாட்டின் புதிய பொழுதுபோக்கு சகாப்தமான வொண்டர்லா சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று திறக்கப்படுகிறது!*
தமிழ்நாட்டில், வொண்டர்லா சென்னையில்
இந்தியாவின் முதல் பொலிகர் & மாபில்லார்ட் (பி & எம்) இன்வெர்ட்டட் கோஸ்டர் ‘தஞ்சோரா’ மற்றும் தனித்துவமான உயர்த்தப்பட்ட ஸ்கை ரெயில் என இவை அனைத்தும் அறிமுகமாகிறது.
சென்னை, 18 நவம்பர் 2025: இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமான வொண்டர்லா ஹாலிடேஸ், அதன் ஐந்தாவது பெரிய திட்டமான வொண்டர்லா சென்னை அறிமுகத்தை இன்று அறிவித்தது. இது இந்திய குடும்பங்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழா. சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் 64.30 ஏக்கர் பரப்பளவில் (தற்போது 37 ஏக்கர் பரப்பளவு) இது உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ரூ. 611 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட வொண்டர்லா சென்னை, எதிர்கால புதுமை மற்றும் பண்டைய தமிழ் கட்டிடக்கலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்ற முக்கிய பிரமுகர்கள் டிசம்பர் 1, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக வொண்டர்லா சென்னையை திறந்து வைக்கிறார்கள். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வொண்டர்லா சென்னை டிசம்பர் 2, 2025 அன்று முதல் வருகிறது.
அருண் கே. சிட்டிலப்பிள்ளி (நிர்வாகத் தலைவர் & நிர்வாக இயக்குநர்), தீரன் சவுத்ரி (சிஓஓ), அஜிகிருஷ்ணன் ஏ ஜி (துணைப் பொறியியல்) மற்றும் வைஷாக் ரவீந்திரன் (பார்க் தலைவர் - சென்னை) ஆகியோர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வொண்டர்லா சென்னையில் தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் 43 உலகத் தரம் வாய்ந்த ரைட்ஸ் (rides) வடிவமைக்கப்பட்டுள்ளது. வொண்டர்லா சென்னைக்கான டிக்கெட்டுகள் அடிப்படை விலை ரூ. 1,489-ல் இருந்து தொடங்குகிறது. ஆன்லைன் முன்பதிவுகளுக்கு 10% தள்ளுபடியும், கல்லூரி அடையாள அட்டையுடன் வரும் கல்லூரி மாணவர்களுக்கு 20% தள்ளுபடியும் தரப்படுகிறது.
அறிமுக விழாவில் வொண்டர்லா ஹாலிடேஸின் நிர்வாகத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அருண் கே சிட்டிலப்பிள்ளி பகிர்ந்து கொண்டதாவது, “வொண்டர்லா சென்னை எங்களின் பத்து வருட கனவாகும். தமிழக அரசின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஊக்கத்தால் தற்போது இது சாத்தியமாகியுள்ளது. தமிழக மக்களின் கலாச்சாரம், படைப்பாற்றல் போன்றவற்றை இந்தப் பூங்காவில் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் நம்பிக்கை வைத்தது போலவே, இந்தியாவின் மிகவும் மேம்பட்ட மற்றும் ஆழமான பொழுதுபோக்கு பூங்காவாக இது உருவாகியுள்ளது மகிழ்ச்சி. கோயில் பாணியிலான வடிவமைப்பு முதல் உள்ளூர் கலை வரை பூங்காவின் ஒவ்வொரு பக்கமும் ஒரு கதை சொல்லும். இந்த அறிமுகம் தென்னிந்தியா முழுவதும் எங்கள் இருப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பிற்கான தமிழ்நாட்டின் முற்போக்கான தொலைநோக்குப் பார்வைக்கு எங்களின் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வரும் குடும்பங்கள் மற்றும் சாகச விரும்பிகளை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
வொண்டர்லா ஹாலிடேஸின் தலைமை இயக்க அதிகாரி தீரன் சவுத்ரி கூறுகையில், "வொண்டர்லாவின் பாதுகாப்பு, புதுமை மற்றும் செயல்பாட்டு சிறப்பைத் தொடரும் வகையில் வொண்டர்லா சென்னையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ரைட் ஆப்ரேஷன், விருந்தினர் சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பு வரை பூங்காவின் ஒவ்வொரு அம்சமும், தடையற்ற அனுபவத்தை வழங்க துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளது. வொண்டர்லா சென்னை கொண்டாட்டத்திற்கான இடமாகவும், பண்டிகை காலங்களில் குடும்பங்கள் மற்றும் சமூகம் ஒன்றிணையும் இடமாகவும் மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உலகத்தரமான கொண்டாட்ட அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார்.
சென்னைக்காக உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த சவாரிகள் (Rides):
இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய பொல்லிகர் & மாபில்லார்ட் (B&M) தலைகீழ் கோஸ்டர் தஞ்சோரா: சுவிஸ் பொறியியலில் உருவாக்கப்பட்ட பூஜ்ஜிய ஈர்ப்பு விசை கொண்ட பல தலைகீழ் மாற்றங்களுடன் கூடிய தஞ்சோரா, விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை தருகிறது.
ஸ்பின் மில்: செங்குத்து சுழல்கள், பல-அச்சு இயக்கம் மற்றும் 4.5ஜி விசையுடன், 50 மீட்டர் உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான சுழலும் த்ரில் சவாரி.
ஸ்கை ரயில்: வைக்கிங் பாணியால் ஈர்க்கப்பட்ட தங்க கோண்டோலாக்களிலிருந்து பரந்த காட்சிகளை வழங்கிறது இந்த ஸ்கை ரயில். பூங்காவிலிருந்து கிட்டத்தட்ட 12 மீட்டர் உயரத்தில் உயரும் 540 மீட்டர் உயர மோனோரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கலாச்சாரத்துடன் கூடிய வடிவமைப்பு:
இல்லலூர் கிராமத்தில் அமைந்துள்ள வொண்டர்லா சென்னையின் வடிவமைப்பு பார்வையாளர்களை நம் பாரம்பரியத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி நிச்சயம் டைம் டிராவலில் அழைத்து செல்லும்.
➢ இயற்கை காற்றோட்டம் மற்றும் பரந்த நிலப்பரப்பு ஆகியவற்றுடன் காலநிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
➢ தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கல் மற்றும் கிரானைட் போன்ற உள்ளூர் மூலப்பொருட்கள் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரைட்ஸ் மட்டுமல்லாது உணவு, நிகழ்வுகள் மற்றும் சில்லறை விற்பனை சலுகைகளும் இங்கு உண்டு!
வொண்டர்லா சென்னை தமிழ்நாட்டின் வளமான உணவு வகைகளை கொண்டாடும் வகையில் எட்டு கருப்பொருட்களுடன், 1384 இருக்கைகளுடன் கூடிய உணவு அரங்குகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச தரத்திலான உணவுகளுடன் திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாடு கோழி மற்றும் சென்னை பாணி கடல் உணவு போன்றவையும் இங்கு கிடைக்கும்.
விருந்தினர்களுக்கான பஃபேக்கள், எ லா கார்டே டைனிங், நேரடி சமையல் கவுண்டர்கள் மற்றும் கியோஸ்க்குகளின் கலவையை அனுபவிக்கலாம். வொண்டர்லாவின் ’Make-Ready-Discard’ கொள்கையின்படி சுகாதாரம் மற்றும் உணவின் தரம் உறுதி செய்யப்பட்டு ஒவ்வொரு உணவும் ஒரே நாளில் புதிதாக தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவதை உறுதி செய்கிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள சில்லறை விற்பனை அங்காடியில் நினைவுப் பொருட்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமாவால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுடன் இணைந்து தஞ்சாவூர் மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை உருவாக்கி, பிராந்திய கைவினை மரபுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விருந்தினர் வசதிகளில் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கான விசாலமான உடை மாற்றும் அறைகள், லாக்கர் அறைகள், எல்லா நேரங்களிலும் பணியாளர்களைக் கொண்ட முதலுதவி மற்றும் துணை மருத்துவ நிலையங்கள், 1500 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு மண்டபம், 8500 சதுர அடி பரப்பளவு கொண்ட திறந்தவெளி நிகழ்வு இடம் போன்றவை பெருநிறுவனக் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு ஏற்றது. மேலும், இங்கு குழந்தைகளுக்கான பிரத்யேக இடங்கள் மற்றும் ஒவ்வொரு விருந்தினருக்கும் பாதுகாப்பு வசதியையையும் உறுதி செய்கிறது.
பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்:
உள்ளூர் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுலாவை ஆதரிக்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை சென்னை வொண்டர்லா உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தமிழ்நாடு அரசின் தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு பணியகத்தால் எளிதாக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்புக்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
➢ 3.75 கோடி லிட்டர் மழைநீர் சேகரிப்பு தொட்டி
➢ 1,000 kW சூரிய சக்தி நிறுவல் (இரண்டாம் கட்டம்)
➢ 32,000 சதுர மீட்டர் பசுமைப் போர்வை மற்றும் 1,000+ பாரம்பரிய மரங்கள்
➢ EN 13814, IS 3328 மற்றும் IS 10500 தரநிலைகளுக்கு இணங்கும் நீர் மற்றும் ரைட் சிஸ்டம்ஸ்
தமிழ்நாட்டில் நுழைவதன் மூலம் வொண்டர்லா, பொழுதுபோக்கு துறையில் அதன் தலைமையை வலுப்படுத்துகிறது. தென்னிந்தியா முழுவதும் அதன் இருப்பை நிலைநிறுத்துவதுடன் நாட்டின் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையில் வலுவான இடம் பிடிக்கிறது.
வொண்டர்லாவில் நுழைவுச்சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://bookings.wonderla.com/ என்ற இணையதளத்தை அணுகவும். இல்லையெனில், வாடிக்கையாளர்கள் பூங்கா கவுண்டர்களில் இருந்தும் நேரடியாக டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது சென்னை பார்க்கை 044-35024222, 044-35024300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் பற்றி:
வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான கேளிக்கை பூங்கா நிறுவனமாகும். அதன் கேளிக்கை பூங்காக்கள் மற்றும் பிரீமியம் ரிசார்ட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வரில் நான்கு உயர்மட்ட கேளிக்கை பூங்காக்களை இயங்கி வருகிறது. அவற்றுடன் பாராட்டப்பட்ட வொண்டர்லா ரிசார்ட் மற்றும் பெங்களூருவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தி ஐல் பை வொண்டர்லா, பிரீமியம் நீர்நிலை ஓய்வு விடுதி ஆகியவையும் உள்ளன. முன்னணி சர்வதேச சப்ளையர்களிடமிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சவாரிகள் உட்பட பல சாகசங்களுக்கு பெயர் பெற்ற வொண்டர்லா, குடும்ப பொழுதுபோக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.








Comments