‘வெள்ளகுதிர’ - விமர்சனம்
- mediatalks001
- Nov 30, 2025
- 1 min read

ஒரு பிரச்சனையில் நாயகன் ஹரிஷ் ஓரி பூர்விக கிராமத்துக்கு தனது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ தன் குடும்பத்தினர் வாழ்ந்த சாலை வசதியே இல்லாத தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் ஒரு உறவினர் ஆதரவால் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்துக் கொண்டிருப்பவர், திருமண விஷேசங்களுக்காக மட்டும் தயாரிக்கப்படும், அங்கு மட்டுமே கிடைக்கும் மூலிகை ரசம் என்ற பெயரில் ஒருவித போதை பொருளை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையே, அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரித்து, அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஊர் தலைவர் உதிரி விஜயகுமாரின் சதி திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் ஓரியின் மனைவி அபிராமி போஸ்.
ஹரிஷ் ஓரியின் மனைவி அபிராமி போஸ் முன்னாள் ஊர் தலைவர் உதிரி விஜயகுமார் மோசடி திட்டத்தை முறியடித்தாரா ? நாயகனின் தலைமறைவு வாழ்க்கையின் பின்னணி என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘வெள்ளகுதிர’.
ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாக அமைதியான நடிப்பில் கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் உதிரி விஜயகுமார், ரெஜின் ரோஸ், ஜெயலட்சுமி, என்.எஸ்.டி.அறிவு ஆகியோர் நடிப்பு சிறப்பு.
இசையமைப்பாளர் பரத் ஆசிகவன் எளிமையான பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராம் தேவ், எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருந்தாலும், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.
மலை கிராமத்தில் தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தை மையமாக கொண்ட கதையுடன் சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்வதுடன் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் சரண்ராஜ் செந்தில்குமார்








Comments