top of page

நடிகர் அர்ஜுன் இடத்தை பிடிக்க ஆசைப்படும் நடிகர் கௌசிக் !

  • mediatalks001
  • 23 hours ago
  • 2 min read


ree

முன்னணி இயக்குநர்களின் கவனம் ஈர்த்த இளம் நடிகர் கெளசிக்!


தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான பற்றாக்குறை இருப்பதாகவும், பல அறிமுக நடிகர்கள் தனித்துவமான திறன் இல்லாததால் நிலைத்து நிற்காததே இதற்கு காரணம், என்று சொல்லப்படும் நிலையில், சில இளம் நடிகர்கள் தனித்துவமான திறமைகளோடு, சினிமாவில் தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்தும் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கெளசிக்.


சமீபத்தில் வெளியான "பூங்கா" படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கௌசிக். 'வீரதேவன்’ படத்தின் மூலம் இளம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கெளசிக், தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ‘சரண்டர்’ திரைப்படத்தில் வில்லனாக, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.


பெண்மைத் தன்மை கலந்த கதாபாத்திரத்தில், வித்தியாசமான நடிப்பு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சி, என வில்லனாக நடித்தாலும், தனித்துவமான கதாபாத்திரத்தை மிக சரியாக கையாண்டு பாராட்டு பெற்ற கெளசிக், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.


என் அப்பா கராத்தே மாஸ்டர் என்பதால், நானும் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்றுள்ளேன்.


’என்னம் போல் வாழ்க்கை’ என்ற படத்தில் நடிக்கிறேன். சுந்தர்.சி அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கமர்ஷியல் நகைச்சுவை படமாக உருவாகிறது. ‘புல் ஹெட்’ என்ற ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறேன். ‘20 அதிகாரம்’ படத்தை இயக்கிய கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் மிக்சட் மார்ஷல் ஆர்ட்ஸ் படமாக உருவாகிறது. இந்த படம் வெளியானால் நிச்சயம் தமிழ் சினிமாவின் தனித்துவமான ஆக்‌ஷன் ஹீரோவாக நான் உருவெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும் ‘சாரன்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். நான் மட்டுமே படம் முழுவதும் வருவதால், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படமாக அது இருக்கும். இவை தவிர மேலும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. சில முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறேன், அதற்காக என்னை தயார்ப்படுத்தியும் வருகிறேன்.


ஒரு நல்ல நடிகராக வேண்டும் என்பது தான் என் ஆசை. அதற்கான அனைத்து பயிற்சிகளையும் முறையாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதே சமயம், தனித்துவமான ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என்பது என் கனவு. தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோக்கள் பலர் இருந்தாலும், பாலிவுட்டில் இருக்கும் டைகர் ஷெராப், வித்யூத் ஜம்வால் போன்ற மார்ஷல் ஆர்ட்ஸ் தெரிந்த ஹீரோக்கள், ஸ்டைலிஷான சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை குறைந்து விட்டது என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் அர்ஜூன் சார், அப்படிப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவரது இடத்தில் யாரும் இல்லை. அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்பது தான் என் விருப்பம் என்கிறார் கௌசிக்!

Comments


©2020 by MediaTalks. 

bottom of page