கர்நாடக இசைப் பாடகர் சிக்கில் குருசரண் இசையமைத்துப் பாடியுள்ள 'சினம் கொள் மனமே' பாடல் !
- mediatalks001
- 8 hours ago
- 1 min read

குணத்தை அழிக்கும் சீர்குலைவான உணர்ச்சியாக மட்டுமே சினம் பரவலாகப் பார்க்கப்பட்ட நிலையில், அகமாற்றத்திற்கான ஊக்கு ஆற்றலாக அதைச் செலுத்திட முடியும் என்பதை, 'சினம் கொள் மனமே' பாடல் வலியுறுத்துகிறது.
கர்நாடக இசைப் பாடகர் சிக்கில் குருசரண் இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடல், சினத்தை எரிபொருளாக்கி, தெளிவுக்கும் மாற்றத்திற்குமான பாதையில் இலக்கமைக்க, மனதைப் பண்படுத்தலாம் என்னும் நம்பிக்கையை விதைக்கிறது.
பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலுக்கு இசை நிரலாக்கத்தை ராஜேஷ் மற்றும் ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இணைந்து செய்துள்ளனர். பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடலை, அனைத்து இசையோடைத்தளங்களிலும் கேட்கலாம். "








Comments