’மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!
- mediatalks001
- 28 minutes ago
- 1 min read
’

மார்க்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்!
’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த பெரிய நட்சத்திரமாக உயர்த்தும்.
‘மார்க்’ திரைப்படத்தில் தீப்ஷிகா வலிமையான வெரைட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘மார்க்’ படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததோடு பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. படத்தில் அவரது நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளவர்கள் நிச்சயம் திறமையாக நடிகையாக அவர் வலம் வருவார் எனவும் தெரிவித்துள்ளனர். நடிகையாக வேண்டும் என்ற லட்சியத்தோடு திரைத்துறைக்குள் நுழைந்திருப்பவரான தீப்ஷிகா நடிப்புக்கு தீனி போடும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் அதிக விருப்பம் இருப்பதாக சொல்கிறார். அர்த்தமுள்ள கதைகள்தான் நடிகர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்கிறார் நம்பிக்கையாக.
’மார்க்’ படத்தில் நடித்துள்ள அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “என் மீது நம்பிக்கை வைத்து என் நடிப்பு திறமைக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் கார்த்திகேயாவின் தெளிவும் வழிகாட்டுதலும் இந்த கதாபாத்திரத்தை திறமையுடன் கையாள உதவியது. மேலும் நடிகர் கிச்சா சுதீப்பின் ஊக்குவிப்பும், அக்கறையும் சகநடிகாராக எனக்கு தேவையான தன்னம்பிக்கை கொடுத்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் ஆதரவு கொடுத்தனர். ‘மார்க்’ திரைப்படம் உணர்வுப்பூர்வமாகவும் கிரியேட்டிவாகவும் பார்வையாளர்களுக்கு முழுமையான படமாகவும் இருக்கும்” என்றார்.
திறமை, சின்சியாரிட்டி, வசீகரம் மற்றும் உழைப்பு என சினிமாவுக்கு தேவையான அனைத்து தகுதிகளோடும் ‘மார்க்’ திரைப்படம் மூலம் தீப்ஷிகா சந்திரன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘மார்க்’ படத்தின் மீதுள்ள அதீத எதிர்பார்ப்பு போலவே தீப்ஷிகாவின் பிரகாசமான வருங்காலத்திற்கும் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.








Comments