top of page

பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

  • mediatalks001
  • 6 days ago
  • 1 min read

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!*


கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது.  தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.


இது பற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் பேசுகையில், “ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக திட்டமிடுவோம்” என்றார்.


படத்தின் டைட்டில், டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


நடிகர்கள்: ரொமாண்டிக் எண்டர்டெயினரான இந்தப் படத்தில் விக்ரமன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழு:


ஒளிப்பதிவு: ஸ்ரீதர்,


படத்தொகுப்பு: ராமர்,


இசை: அஜீஷ் அசோகன்.


Comments


©2020 by MediaTalks. 

bottom of page