ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ‘அல்லு சினிமா’ஸூக்காக சிறப்பு விளம்பர படத்தை படமாக்கியுள்ளார்!
- mediatalks001
- 12 hours ago
- 1 min read

அல்லு சினிமாஸ் நிறுவனத்திற்காக உருவாகும் சிறப்பு விளம்பர படத்தின் படப்பிடிப்பை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த விளம்பர படத்தை இயக்குநர் கௌதம் நாயுடு இயக்கியுள்ளார். உயர்தரமான சினிமா தரத்துடன் மிக பிரம்மாண்டமாக இந்த விளம்பர படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ள அல்லு சினிமாஸ் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய கட்டமாக இந்த விளம்பர படம் அமைந்துள்ளது. நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை, பிரம்மாண்டம் மற்றும் தரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பர படம் தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக வெளியிடப்பட உள்ளது.
அல்லு அர்ஜுனின் வலுவான திரை இருப்பும், அவருடைய ஸ்டைலும் இந்த விளம்பர படத்தில் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.








Comments