top of page

Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு !

  • mediatalks001
  • 5 hours ago
  • 1 min read

உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!


சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.


Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும். பயனர்களின் மதிப்பீடுகள், விமர்சனங்கள் மற்றும் பார்வை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடும் இந்த தளம், சர்வதேச அளவில் பெரும் நம்பகத்தன்மை பெற்றுள்ளது. அந்த வகையில், காமெடி எண்டர்டெயினர் பிரிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பெற்றுள்ள உயர்ந்த இடம், உலக ரசிகர்களிடையே இப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.


இலங்கை மக்களின் வலியை அவர்களின் வாழ்வினை, குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி–கமர்ஷியல் கலவையுடன் சொல்லியிருப்பதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் பெரிய பலமாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். வலுவான கதை அமைப்பு, எளிமையான ஆனால் தாக்கமுள்ள திரைக்கதை, மனிதநேய உணர்வுகள் ஆகியவை பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் அசத்தலான இயக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Letterboxd வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டின் டாப் டென் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் என்பதும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் அபிஷன் ஜீவிந்த் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தை பெருமைகொள்ள வைக்கிறது.


2025 ஆம் ஆண்டில் வெளியான முக்கியமான தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, வரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் மேலும் பல விருதுகளை வெல்லும் என்ற நம்பிக்கையை திரை ஆர்வலர்களிடையே உருவாக்கியுள்ளது. குறிப்பாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு குவியும் பாராட்டுகள், அவரை எதிர்கால தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு காமெடி எண்டர்டெயினர் வகையில் கிடைத்த இந்த சர்வதேச அங்கீகாரம், ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page