top of page

ரோட்டரி கிளப்பின் மாரத்தான் நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட ‘கெவி’ படக்குழு

mediatalks001

நல்ல காரணத்திற்காக ரோட்டரி கிளப்பின் மாரத்தான் நிகழ்ச்சியில் இணைந்துகொண்ட ‘கெவி’ படக்குழு


டெகாத்லான் மற்றும் விளையாட்டு அரங்கத்துடன் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரோட்டரி கிளப் ஒரு மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. துவக்கத்தில் இந்த நிகழ்ச்சி போதை பொருட்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகவே திட்டமிடப்பட்டு இருந்தது.


அதேசமயம் ‘கெவி’ திரைப்பட குழுவினர், கிராமத்து பகுதிகளில் தரமான சாலைகள் அமைப்பது, உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது குறித்த இதேபோன்று இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த சமூக பிரச்சனையை கையிலெடுத்து ரோட்டரி கிளப்புடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.


சாலைகள், மருத்துவமனைகள், மற்றும் பள்ளிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் பற்றாக்குறையாக உள்ள, ரொம்பவே தொலைதூர பகுதிகளுக்குள் இருக்கும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை போராட்டங்களை மையப்படுத்தி ‘கெவி’ திரைப்படம் உருவாகியுள்ளது.


கெவி படக்குழுவினர் மலைக் கிராமத்து மக்கள் பயன்படுத்தும்‘டோலி’ என்கிற சாதனத்தை கைகளில் பிடித்தபடி இந்த மாரத்தான் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இந்த தனித்துவம் கொண்ட முயற்சியின் மூலமாக தமிழகத்தின் மேற்கத்திய மலைப்பகுதி கிராம மக்கள் சந்திக்கும் சவால்கள் மீது அனைவரின் கவனத்தையும் திருப்ப வைத்துள்ளனர்.


‘கெவி’ திரைப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் தங்களை இணைத்துக்கொண்டாலும் கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே பிரதான நோக்கமாக கொண்டிருந்தனர். இந்த கூட்டு முயற்சியானது, சமூகத்தில் ஆக்கப்பூர்வமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஒன்றாக இந்த டெக்கத்லான் விழா நடைபெற்றது.


A.John PRO

Comments


©2020 by MediaTalks. 

bottom of page