top of page

லில்லி புட் என்கிற பெயரில் புதிய படத்தை தயாரிக்கும் சேலம் வேங்கை அய்யனார்

mediatalks001




சேலம் வேங்கை அய்யனார்

நடிகர், தயாரிப்பாளர்.


விஜய் நடித்த 'சர்க்கார்' படத்தில் தேனீ விவசாய வேட்பாளராக நடித்தவர். மாஸ்டர் மகேந்திரன் மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் 'கரா' படத்தில் தாதா வேடத்தில் நடித்துள்ளார். அம்மா ராஜசேகர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்'தல' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் 'வெட்டு' என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் காட்டுவாசி சமூகத்தின் தலைவராக நடித்துள்ளார். விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் 'நொடிக்கு நொடி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.


சேலம் வேங்கை அய்யனார் நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. தனது ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் தயாரிப்பில் 'என்டர் தி டிராகன்' என்ற படத்தை தமிழில் எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு ஆகியோர் நடிக்கிறார்கள். பார்த்திபன்.ஜெ இயக்குகிறார். கதாநாயகனாக வெற்றி நடிக்கிறார் .இந்த படத்தில் சேலம் வேங்கை அய்யனார் அரசியல்வாதியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது.


இதைத் தொடர்ந்து 'லில்லி புட்' என்ற பெயரில் புதிய படத்தை விரைவில் தொடங்க உள்ளார். லில்லி புட் என்பது ஒரு வகையான மிருகம். .இதை வீட்டில் வைத்து வணங்கினால், நினைத்ததை சாதிக்கும் வல்லமை வரும். இந்தியாவின் மிகமுக்கிய அரசியல்வாதி ஒருவர் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இயக்குனர் அவதார் பிரமாணாடமாக இயக்கவுள்ளார். பெரிய கதாநாயகன் ஒருவர் நடிப்பதாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கிறார் சேலம் வேங்கை அய்யனார்

Comments


©2020 by MediaTalks. 

bottom of page