
சென்னையில் வாழும் விஜி சந்திரசேகரின் மகளான லவ்லின் சந்திரசேகர். பிறந்தநாள் அன்று நண்பர்கள் முன்னிலையில் தன்னிடம் பழகும் நண்பர்களின் நட்பை விஜி சந்திரசேகர் அவமானப்படுத்தியதால் கோபித்துக் கொண்டு வெளியூரில் இருக்கும் தனது தோழி வீட்டிற்குச் செல்கிறார் லவ்லின் சந்திரசேகர்.
ரயில் பயணத்தில் டிக்கெட் பரிசோதகராக இருக்கும் யோகிபாபுவை சந்திக்கிறார் லவ்லின் சந்திரசேகர் . இருவரும் பேசிக் கொள்ள, தாயின் அருமை என்னவென்று தெரிந்து கொள்ள நான்கு உண்மைச் சம்பவங்களை நடந்த கதைகளாக லவ்லின் சந்திரசேகரிடம் சொல்கிறார் யோகிபாபு
பாலியல் தொழில் செய்யும் கனிகாவை சிறுவயதில் இழந்த நட்டி மிகப்பெரிய தாதாவாக மும்பையில் வலம் வருகிறார்.
மற்றொரு தாதாவான சுரேஷ் மேனன் தனது மகனைக் கொன்ற நட்டியை சுட்டு கொல்ல நேரம் எதிர்பார்த்தது காத்துக்கொண்டிருக்கிறார்.
காவ்யாவை காதலித்ததால் ஆணவ கொலைக்கு பயந்து கிராமத்திலிருந்து வாய் பேசமுடியாத தனது காதலியான காவ்யாவை அழைத்து கொண்டு மும்பை வரும் ரிஷிகாந்த் சுரேஷ் மேனனிடம் மாட்டிக்கொள்கிறார். ரிஷிகாந்த்தை வைத்து நட்டியை கொலை செய்ய திட்டம் போடுகிறார் சுரேஷ் மேனன். இறுதியில் ரிஷிகாந்த் நட்டியை கொலை செய்தாரா ? இல்லையா? என்பதே முதல்கதை.
கிராமத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் கணவன் மனைவி யாக இருக்கும் நேரத்தில் . இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் இருந்தும் வறுமையில் பிடியில் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் இவர்கள் இருவரையும் மகன்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். முடிவில் இவர்கள் இருவர் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதே இரண்டாவது கதை.
மீனவ குடும்பத்தைச் சேர்ந்த ரியோராஜ் , சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்தவர் தாய் ஆதிரையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.
ஒருநாள் தாய் ஆதிரை மயக்கம் போட்டு விழ அவருக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.அவரை காப்பாற்ற பணம் தேவைப்படுவதால் ஏரியா ரெளடியாக இருக்கும் மைம் கோபி சொல்லும் வேலையை செய்கிறார் ரியோ ராஜ் . பணத்திற்காக ரியோ ராஜ் செய்த வேலையால் தன் தாயின் உயிரை காப்பாற்றினாரா ? இல்லையா? என்பது முன்றாவது கதை.
சென்னையில் உள்ள ஒரு வீட்டுவசதி வாரியத்தில் ஆட்டோ ஓட்டும் சாண்டிக்கும் அய்ரா கிருஷ்ணனுக்கும் காதல் மலர்கிறது. அதே நேரத்தில் கணவனை இழந்த துளசியை வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அவரது மகன், மருமகள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுப் போகிறார்கள்.மகன், மருமகளால் கைவிடப்பட்ட துளசி சாண்டியின் ஆட்டோவில் பயணிக்கும் போது இருவருக்கும் எதிர்பாராத தாய் – மகன் பிணைப்பு உருவாகியது.
காதலி அய்ரா கிருஷ்ணனிடம் புதிதாக உறவால் கிடைத்த அம்மாவை அறிமுகம் செய்யும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காதலி அய்ரா கிருஷ்ணனை அம்மா என்ற உறவுக்காக தன் காதலை தூக்கி எறிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன் சாண்டியின் கதையாக நான்கு விதமான கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் அம்மா மீதான பாசப் போராட்டம் தான் ‘நிறம் மாறும் உலகில்’.
நான்கு கதைகளின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி, ரியோ ராஜ், பாரதிராஜா - வடிவுக்கரசி, சாண்டி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் துளசி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையுடன் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்
நான்கு கதைகளுக்கும் தாய் பாசத்தை மைய கருவாக வைத்து இன்றைய சமூகத்தில் நடக்கிற நிகழ்வுகளை காதல் ,செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த திரைக்கதையுடன் படமாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ
ரேட்டிங் - 3 / 5
Comments