top of page

'யானை மரம்' படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய இயக்குநர் பா ரஞ்சித்

mediatalks001
19 hours ago
1 min read

ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ள 'யானைமரம்' படத்தின் டிரைலரை பார்த்து, பாராட்டினார் பா.ரஞ்சித். "யானைமரம்" படத்தின் First Look போஸ்டரை தனது 'சார்பட்டா பரம்பரை ரவுண்ட் 2' படப்பிடிப்பு தளத்தில் வெளியிட்டார் பா.ரஞ்சித்!


அருகில் நடிகர்கள் ஜெயிலர் சீனு, ஜான் கொக்கன், ஹரீஷ் உத்தமன், கே.பிரபாகரன், இயக்குநர் ராமையா ரவிச்சந்திரன்.


பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம்.


பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பரமு என்கிற சிறுவன், தனக்கு கிடைக்க வேண்டிய ஐந்து ரூபாய் உரிமைக்காக போராடுகிறான். மேலும், அவன் தனது சிறு வயதில் நட்டு வைத்த மா விதை தற்போது யானையின் உருவத்தில் வளர்ந்து நிற்பதைப் பார்த்து ஆச்சர்யப் படுகிறான்.

பரமு, அந்த யானை மரத்தை நண்பனாக பாவித்து அதனிடம் தன் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த சமூகத்தில் அவனுக்கான உரிமை கிடைத்ததா? அவனுக்கும் யானை மரத்திற்கும் உண்டான நட்பு என்ன ஆனது? என்பதே இந்த திரைப்படத்தின் கதை.


மாஸ்டர் அபினேஷ், ஜோதி கண்ணன், செம்புலி ஜெகன், ஜெயிலர் சீனு, ராணி, மஞ்சு, லீலா ஆகியோர் இந்த கதையில் வாழ்ந்துள்ளனர்.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ராமையா ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இசை அரவிந்த் சித்தார்தா, ஒளிப்பதிவு தமிழ் மாறன், கலை ஆர்.அபிராம், படத்தொகுப்பு கோபால், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், ஓப்பன் விண்டோ பிக்சர்ஸ் சார்பில் ஆர்.சசிகலா தயாரித்துள்ளார்.


இதுவரை 20 சர்வதேச விருதுகள் இப்படம் பெற்றுள்ளது. உலக நாடுகளில் 16 இடங்களில் திரையிடப்பட்டு, பாராட்டுக்கள் பெற்று வருகிறது. விரைவில் திரைக்கும் வருகிறது 'யானை மரம்'!


@GovindarajPro

Comments


©2020 by MediaTalks. 

bottom of page