top of page

முதல்மொழி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை நடத்திய அறிவியல் விழா

  • mediatalks001
  • Sep 29
  • 1 min read

ree

முதல்மொழி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை நடத்திய அறிவியல் விழா


மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்


முதல்மொழி தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை நடத்திய அறிவியல் விழா இன்று (செப்டம்பர் 27, சனிக்கிழமை) அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது


இந்நிகழ்வில்


- முதல்மொழி் அறிவியல் காலாண்டு முதல் இதழ் மற்றும்

- ⁠கருப்பு தங்கம் பெட்ரோலியம் நூலை மாண்புமிகு அமைச்சர் வெளியிட்டார்.

மேலும்


⁠வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி (முதல் பரிசு ₹10000, 2 ஆம் பரிசு ₹7000, 3 ஆம் பரிசு 5000 மற்றும் ஆறுதல் பரிசுகள் 15 - ₹ 2000) சிறப்பு செய்து, தமிழறிஞர் மணவை முஸ்தபா நினைவு பரிசை ( ₹ 10000) மறைந்த அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் குடும்பத்துக்கு வழங்கினார்


இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக,


முதல் மொழி அறிவியல் நூலகம் இரண்டு - 1) அரசினர் மேல்நிலைப்பள்ளி நுங்கம்பாக்கம் மற்றும் 2) நவ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி, தியாகராய நகர் பள்ளிகளுக்கு நன்கொடையாக மாண்புமிகு அமைச்சர் மூலமாக முதல் மொழி அமைப்பு வழங்கியது



மேலும்


அறிவியல் குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கி அறிவியல் எழுத்தாளர்களை சிறப்பு செய்தார்


மாண்புமிகு அமைச்சர் மேற்கண்ட பரிசுகளை வழங்கி, விழா சிறப்புரை ஆற்றினார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page