top of page

கம்பீரமான போலீஸ் அதிகாரியாக, கதாநாயகன் விகாஸ் நடிக்கும் "துச்சாதனன்"

mediatalks001



கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விகாஸ்!

வி.ஜி.பிலிம்ஸ் மற்றும் விவா பிலிம் இணைந்து தயாரிக்கும் "துச்சாதனன்"!

கம்பீரமான போலீஸ் அதிகாரியாக, கதாநாயகன் விகாஸ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'அகிலா முதலாம் வகுப்பு', 'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா', 'ஒற்றாடல்', 'ஆந்தை' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

படத்தின் தொடக்கத்திலேயே நகைக் கடை ஒன்றில் பெரிய திருட்டு சம்பவம் நடக்கிறது. அவர்களை காவல்துறை கண்டுப்பிடித்து, கைது செய்யும் சமயத்தில், கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் வருகிறது. காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வருகிறது. நகைக்கடை திருட்டுக்கும், மாணவி தற்கொலைக்கும் இடையே உள்ள சம்பந்தம், படம் முடியும் வரை கண்டுபிடிக்க முடியாத வகையில், திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக இயக்கி உள்ளார் தளபதி.

நாயகியாக சலோனி சயூரி அறிமுகமாகிறார். சிங்கம் புலி, வேளாங்கண்ணி, பிரபு சாஸ்திரி, தமிழ்ச்செல்வி, மணிமாறன், சாய் ரோகிணி, மில்டன், மேடிசன், அருண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய படமாக 'துச்சாதனன்' அமைந்துள்ளது. பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு படமாக அமையும் என்கிறார் இயக்குனர் தளபதி.

ஒளிப்பதிவு பி.வி.பாலமுருகன், இசை விஜய் பிரபு, படத்தொகுப்பு விக்னேஷ் வி.எஸ், பாடல்கள் வித்தாகர், சண்டைப் பயிற்சி ராக்கி ராஜேஷ், நடனம் பவர் சிவா, மக்கள் தொடர்பை கோவிந்தராஜ் கவனிக்கிறார். ஆர்.வேல் முருகன், எஸ்.அருண் விக்னேஷ் இருவரும் படத்தை தயாரித்து உள்ளனர். இணைத் தயாரிப்பு வி.பி.சரவணகுமார்.

விரைவில் திரைக்கு வருகிறது "துச்சாதனன்"!


Kommentare


©2020 by MediaTalks. 

bottom of page