top of page

நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!


நடிகை எமி ஜாக்சன் - எட் வெஸ்ட்விக் திருமணத்திற்கு இயக்குநர் விஜய் வாழ்த்து!



மதராசப்பட்டினம்’ படப்புகழ் நடிகி எமி ஜாக்சன் - ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றிருக்கிறது. இந்தத் திருமணத்தில் இயக்குநர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்.



இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தி, ‘அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துக்கள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


Comments


bottom of page