தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் புரட்சி தலைவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகர், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் அவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லதாசேதுபதி மூத்த நடிகை.சச்சுஅம்மா திரு.தளபதி தினேஷ், திரு.MA.பிரகாஷ், நடிகர்.சவுந்தரராஜா திரு.அனந்தநாராயணன் மற்றும் சங்க மேளாலர் A.தாமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
“தென்னிந்திய நடிகர் சங்கத்தினுடைய மிக மிக முக்கியமான அஸ்திவாரம் அய்யா மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். அவருடைய ஆசியில் வெகு சீக்கீரம் இந்த நடிகர் சங்க கட்டிடத்தை அவர்கள் நினைவஞ்சலியாக கட்டி எல்லோருடைய பசியை போக்கணும் என்பதே என்னுடைய, எங்களுடைய பிராத்தனை..”
- நாசர்.
Comentarios