மாயவேட்டை இத்திரைப்படத்தை மூவிலயா பிக்சர்ஸ் ஜாகிர் ஹூசைன் இஸ்மாயில் அவர்கள் தயாரிக்க செங்கை தமிழன் ராஜேஷ் எழுதி இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் கீழக்காடு,பற்றவன்,ஆன்மீக அழைப்பு திரைப்படங்களில் வில்லனாக நடித்த சிக்கல் ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வாணிஸ்ரீ,திவ்யபாரதி போன்றோர் நடித்துள்ளனர். பெரியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். முகமது அசாருதீன் இசையமைத்துள்ளார். மணிகுமரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மாயவேட்டை இஸ்லாமிய புனித நூலான குரானில் சைத்தான்கள் என்று அழைக்கபடும் ஜின்கள், மனிதர்களின் மேல் உள்ள கோவத்தால் மனிதர்களை அழிக்க எடுக்கும் முயற்சிகளையும் அதை எதிர்கொள்ளும் மனிதர்களின் போராட்டங்களையும் விளக்கும் Mythological horor திரைப்படமாக உருவாகியுள்ளது.
ஜின்கள் பற்றி இதுவரை யாரும் சொல்லாத, ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்குமான தொடர்பையும் சொல்லும் வித்தியாசமான திரைக்கதையாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது!
Comments